கடனை மொத்தமா கட்டினாலும் விடமாட்டாங்க.. கோவையில் லோன் ஆப் யூஸ் பண்றீங்களா? மறந்தும் இதை செய்யாதீங்க
கோயம்புத்தூர்: கோவை மாநகரில் மொபைல் செயலிகள் மூலம் வழங்கப்படும் உடனடி கடன் வசதியை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களின் பணத்தையும், தனிப்பட்ட தகவல்களையும் இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.. சோஷியல் மீடியா விளம்பரங்கள் மற்றும் மெசேஜ்கள் மூலமாக, ஆவணங்கள் தேவையில்லை என்றும் 5 நிமிடங்களில் கடன் கிடைக்கும் என்றும் கூறி பல செயலிகள் மக்களை கவர்ந்து வருகின்றன.. இதை பற்றிதான் கிரைம் பிரான்ச் போலீசார் முக்கிய வார்னிங் ஒன்றை தந்துள்ளனர்.
கோவை மாநகரில் மொபைல் செயலிகள் மூலம் வழங்கப்படும் உடனடி கடன் வசதியைப் பயன்படுத்திப் பொதுமக்கள் தங்களின் பணத்தையும், தனிப்பட்ட தகவல்களையும் இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகச் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..

அதிக வட்டி கேட்டு மிரட்டல்
சோஷியல் மீடியா விளம்பரங்கள் மற்றும் குறுந்தகவல்கள் மூலமாக, ஆவணங்கள் தேவையில்லை என்றும் 5 நிமிடங்களில் கடன் கிடைக்கும் என்றும் கூறி பல செயலிகள் மக்களைக் கவர்கின்றன.
இந்த ஆப்பை டவுன்லோட் செய்தவுடன், செல்போனில் உள்ள காண்டாக்ட் நம்பர்கள் மற்றும் போட்டோக்களை அணுக அனுமதி பெறப்படுகிறது.. இதன் மூலம் மொபைலில் உள்ள தகவல்களை அவர்கள் எளிதாகப் பெறுகின்றனர்.. அதன் பிறகு அதிக வட்டி கேட்பது, மிரட்டல் அழைப்புகள் விடுப்பது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.. குறிப்பாக அவசர தேவைக்காக கடன் பெற முயற்சி செய்யும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள் தான் இதில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்..
கடனை செலுத்தியும் தொடரும் மிரட்டல்கள்
கடன் தொகையை திருப்பி செலுத்திய பிறகும்கூட, சிலர் தொடர்ந்து பணம் கேட்டுத் தொந்தரவு செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.. கடனை திரும்ப தராதவர்களிடம் அவர்களின் தனிப்பட்ட போட்டோக்களை மார்பிங் செய்து அனுப்பி, அதைப் பரப்பி விடுவோம் என்று மிரட்டிப் பணம் பறிக்கிறார்கள்..
இதுபோன்ற சம்பவங்கள் குறித்துக் கோவை மாநகர சைபர் கிரைம் பிரிவில் தினந்தோறும் 1 அல்லது 2 புகார்கள் பதிவாகின்றன.. பொதுமக்கள் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.. இந்திய ரிசர்வ் வங்கி அங்கீகாரம் பெற்ற வங்கிகள் மற்றும் நம்பகமான நிதி நிறுவனங்களின் செயலிகள் மூலம் மட்டுமே கடன் பெற வேண்டும்.. தெரியாத லிங்குகளை கிளிக் செய்யவோ அல்லது செயலிகளை டவுன்லோட் செய்யவோ கூடாது.
புகார் தர முன்வரவேண்டும்
இது குறித்து மாநகரச் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி கூறும்போது, அவசரத் தேவை மற்றும் பண நெருக்கடி காரணமாக பொதுமக்கள் இது போன்ற ஆபத்தான செயலிகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.
போட்டோக்களை மார்பிங் செய்து மிரட்டினால் அதற்கு பயப்படாமல் புகார் அளிக்க முன்வர வேண்டும்.. பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்கள் எப்போதும் பாதுகாப்பாக வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.. அதனால் தெரியாத செயலிகள் மூலம் கடன் பெறாமல் இருப்பதே பாதுகாப்பானது என்று போலீசார் எச்சரித்துள்ளார்கள்.. இதுபோன்ற மிரட்டல்கள் வந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..,!!












Click it and Unblock the Notifications