'பன்னி' மடை இல்லையா.. 'பன்னீர்' மடை.. பல ஆண்டு கனவு நினைவாக போகுது.. கோவை அருகே கிராமமே ஹேப்பி
கோவை: கோவை மாவட்டம் பன்னிமடை ஊராட்சியின் பெயர் பன்னீர்மடை என கோவை மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரை செய்துள்ளதால் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் பன்னிமடை ஊராட்சியின் பெயரை பன்னீர்மடை என மாற்ற கோவை மாவட்ட நிர்வாகத்தினர் பரிந்துரை செய்துள்ளதால் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோயம்புத்தூரிலிருந்து 12 கி.மீ தூரத்தில் இருக்கும் இந்த பன்னிமடை கிராமத்தில் அரசு அலுவலகங்களில் 'பன்னிமடை' என்றும், தனியார் வணிக வளாகங்களில் 'பன்னீர் மடை' என்று மாற்றியும் ஊரின் பெயர் எழுதப்பட்டிருக்கும் 'பன்னி மடை' என்ற பெயரால் இந்த ஊர் மக்கள் சந்தித்துவரும் அவமானங்கள் ஏராளம். ஆனால் அந்தப் பெயரை மாற்றுவதற்கு இவர்கள் செய்யும் முயற்சிகளை அரசு பல ஆண்டுகளாக கண்டு கொள்ளவே இல்லை.
பன்னிமடை என்று இந்த கிராமத்தை அழைக்க தவறான பெயர் காரணம் இருக்கிறது. எப்படி என்றால், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி பொன்னூத்து மலையில் இருந்து சிற்றோடைகள் வழியாக வரும் தண்ணீர் தெளிந்த பன்னீர் போல தேங்கி நிற்கும். அதை மரத்தாலான மடை கொண்டு தேக்கி வைப்பார்கள் . அந்த மடையை திறந்து இந்த கிராம மக்கள் தண்ணீரை குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
இதனால் அந்த பகுதி பன்னீர்மடை என்று கிராம மக்களால் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் அந்த பெயர் மருவி பன்னிமடை என்று ஆகி விட்டது. பன்னிமடை என்பது அந்த ஊரின் உண்மையான காரண பெயரை தவறாக சித்தரிப்பதாக தற்போது இருக்கிறது. அந்த ஊர் மக்கள் தங்கள் ஊர்பெயரை சொல்லும் போது, சிலர் கிண்டல் செய்யும் சம்பவங்களும் நடந்து வந்தன.
இதனால் அந்த கிராம மக்கள் பன்னிமடை ஊராட்சி என்பதை பன்னீர்மடை ஊராட்சி என்று அரசு ஆவணத்தில் மாற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தார்கள். அது பல ஆண்டுகளாக கிடப்பிலேயே கிடந்தது
இந்த நிலையில் கிராம மக்களின் கோரிக்கைக்கு பல வருடம் கழித்து பலன் கிடைத்துள்ளது. தற்போது கோவை மாவட்ட நிர்வாகம் பன்னிமடை ஊராட்சி என்பதை பன்னீர்மடை ஊராட்சி என்று பெயர் மாற்றம் செய்ய பரிந்துரை செய்திருக்கிறது. இதற்கு ஊராட்சி மன்றத்தின் தீர்மான நகல் கூடிய முன்மொழிவுகள், ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்து சென்னையில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது..
இதனால் பன்னிமடை ஊராட்சி என்பது விரைவில் பன்னீர் மடை ஊராட்சி என்று பெயர் மாற்றம் அடைய போகிறது. இதனால் பன்னீர்மடை பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதை அந்த கிராம மக்கள் பேனர் வைத்துகொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications