அடப்பாவிகளா! ஊறுகாய்க்காக அடித்து கொலையா?.. கொன்ற வடமாநில இளைஞரின் புகைப்படம் வெளியீடு
கோவை: கோவை பீளமேடு பகுதியில் ஊறுகாய்க்காக சக நண்பனின் உயிரை பறித்த வட மாநில இளைஞரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
கோவை பீளமேடு பகுதியில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்ற 4 இளைஞர்கள் ஒரு அறையில் தங்கியுள்ளனர். இவர்கள் நேற்று மதியம் உணவு சாப்பிட வீட்டுக்கு சென்றனர்.

முதலில் இருவர் உணவு உட்கொண்டுவிட்டு சென்றுள்ளனர். பின்னர் 17 வயதான சித்துகுமாரும் , 20 வயதான பிரஜங்கி குமாரும் உணவருந்த சென்றுள்ளனர். இந்த நிலையில் அப்போது குழம்பு தீர்ந்ததால் சித்து தனது அறை தோழன் பிரஜங்கியிடம் ஊறுகாய் கேட்டுள்ளார்.
ஆனால் ஊறுகாய் தர மறுத்த பிரஜங்கி குமார், அதை மறைத்து வைத்துக் கொண்டார். பின்னர் இருவரும் இதனால் சண்டையிட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் சண்டை உச்சகட்டத்தை எட்டிய நிலையில், சித்து குமாரை கழுத்தை நெரித்தும் எட்டி உதைத்தும் உள்ளார் பிரஜங்கி குமார்.
இது போல் சரமாரியாக தாக்கிவிட்டு பிரஜங்கி குமார் வெளியேறிய நிலையில் மயக்கமடைந்த சித்துகுமாரை மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக பீளமேடு போலிஸார் பிரஜங்கி குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஊறுகாய்க்காக தனது அறையில் சக நண்பரை கொன்ற வட மாநில இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. இருவரும் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இறந்த சித்துகுமார், மற்றும் கொலை செய்த பிரஜங்கி குமாரின் புகைப்படம் கிடைக்காமல் இருந்தது. அவர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பீளமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications