ஆர்எஸ்எஸ் பயிற்சிக்கு எதிர்ப்பு.. கோவையில் போராடிய பெரியார் திராவிடர் கழகத்தினர் குண்டுகட்டாக கைது!
கோயம்புத்தூர்: ஆர்எஸ்எஸ் சாகாவிற்கு எதிராக கோயம்புத்தூரில் போராடிய பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் உத்தரவை மீறி போராடியதால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல இடங்களில் தனியார் பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகா நடப்பதாக கடந்த சில நாட்களாக புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது.
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பள்ளிகளில் பயிற்சி நடப்பதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அங்கு இருக்கும் பிரபல பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கூட்டமாக வந்து பயிற்சிகளை அளித்து வருகின்றனராம்.

பள்ளிகள் ஆர்எஸ்எஸ்
முன்பு கல்லூரிகளில் இதுபோல ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாக சாகா நடத்தப்பட்டது வந்தது. அப்போதே இதற்கு கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த நிலையில்தான் தனியார் பள்ளிகளில் இப்படி சாகா நடப்பதாக புகார் எழுந்தது. இங்கு சாகாவின் போது கம்பு சுற்றுதல், உறுதி மொழி எடுத்தல் போன்ற பயிற்சிகள் எடுப்பதாகவும் கூறப்பட்டது.

ஆர்எஸ்எஸ் சாகா
கோவை பள்ளிகளில் நடக்கும் ஆர்எஸ்எஸ் சாகாவிற்கு பெரியார் திராவிடர் கழகத்தினர் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும் இதுகுறித்து போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். ஆனால் போலீசார் இதில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து இன்று கோவை விளாங்குறிச்சி சாலையில் அமைந்து உள்ள தனியார் பள்ளியில் மீண்டும் ஆர்எஸ்எஸ் சாகா ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆர்எஸ்எஸ் பெரியார்
இதற்கு அனுமதி அளிக்க கூடாது என்று பெரியார் திராவிடர் கழகத்தினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த சாகாவிற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இதையடுத்து பெரியார் திராவிடர் கழகத்தினர் பயிற்சி நடக்கும் பள்ளிக்கு முன்பாக போராட்டம் செய்தனர். பெரியார் திராவிடர் கழகத்தினர் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

ஆர்எஸ்எஸ் கோயம்புத்தூர்
இந்த போராட்டம் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட 45 பேரை போலீசார் கைது செய்து ஜீப்பில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications