ரஜினிக்கு வார்னிங்.. கோவையில் ஆயிரக்கணக்கான பெரியார் ஆதரவாளர்களின் நீலச்சட்டை பேரணியில் தீர்மானம்
கோவை: பொதுமக்களின் போராட்டங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதை நடிகர் ரஜினிகாந்த் நிறுத்த வேண்டும் என்று கோவையில் பல்லாயிரக்கணக்கான பெரியார் ஆதரவாளர்கள் பங்கேற்ற நீலச்சட்டை பேரணியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோவையில் அம்பேதக்ர் நினைவு நாளை முன்னிட்டு பெரியார் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து நீலச்சட்டை பேரணியை நடத்தினர். இதில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் நீலச்சட்டையுடன் பங்கேற்றனர். கோவை அண்ணா சாலையில் இருந்து மகளிர் பல்தொழில்நுட்பக் கல்லூரி வரை இப்பேரணி நடைபெற்றது.

பின்னர் சாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் தி.க. தலைவர் கீ. வீரமணி, திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் உள்ளிட்ட பல இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் மொத்தம் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக மக்களின் போராட்டங்களை இழிவுபடுத்தும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து பேசிவருவதை நிறுத்த வேண்டும்; சாதியை பாதுகாக்கும் மனுதர்ம நூலை மே 31-ந் தேதி தமிழகம் முழுவதும் தீயிட்டு எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications