அதிரடி..கோவை பாஜக அலுவலக பெட்ரோல் குண்டு வீச்சு.. கைதானவர்கள் மீது பாய்ந்த தேசிய பாதுகாப்பு சட்டம்
கோவை : கோவையில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான 2 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. குறிப்பாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர்களை குறிவைத்து இந்த பெட்ரோல் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.
கோவை, ஈரோடு, சேலம், மதுரை, சென்னை, கன்னியாகுமரி உள்பட பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
இந்த பெட்ரோல் குண்டு வீச்சின் துவக்க புள்ளி என்பது கோவையின் பாஜக அலுவலகமாகும். கடந்த மாதம் 22ம் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் அமைந்துள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை.

கண்காணிப்பு கேமராவில் பதிவு
இதனை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு அடுத்தடுத்து பிற இடங்களில் பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் தமிழகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த கண்காணிப்பு கேமரா பதிவின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

2 பேர் அதிரடி கைது
இந்த விசாரணையின் அடிப்படையில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சேரன் காலனியை சேர்ந்த சதாம் உசேன் (வயது 32), துடியலூர் ஆர்எஸ் தோட்டம் நேரு வீதியைச் சேர்ந்த அகமது சிகாபுதீன் (24) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
இவர்கள் 2 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுபற்றி போலீசாரும் பரிசீலனை செய்து வந்தனர். இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி, 2 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான நகல்கள் இன்று கோவை மத்திய சிறையில் 2 பேரிடமும் வழங்கப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications