முக்கிய இடத்தில் வருது.. ராட்சச சைஸ் மால்.. இது கோவையின் காலம்.. அடிச்சு மேலே வருது பாருங்க!
கோவை: கோவை மாநகரின் வர்த்தக முகப்பை மாற்றியமைக்கும் வகையில், அவினாசி சாலையில் சுமார் 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான 'பீனிக்ஸ் மால்' (Phoenix Mall) கட்டுமானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த வணிக வளாகம், கட்டி முடிக்கப்படும் போது தமிழகத்தின் மிகப்பெரிய மால்களில் ஒன்றாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவா இந்தியா பகுதியில் உள்ள ரேடிசன் புளூ ஹோட்டல் அருகே இந்த பிரம்மாண்ட கட்டுமானப் பணிகள் அதிவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கோவையின் வளர்ந்து வரும் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையவுள்ள இந்த மாலில், சர்வதேச தரத்திலான 350-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள், 10 திரைகளைக் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மற்றும் பிரம்மாண்டமான உணவகங்கள் இடம்பெறவுள்ளன. சென்னை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியைத் தொடர்ந்து, பீனிக்ஸ் குழுமத்தின் தமிழகத்திலான இரண்டாவது பெரிய திட்டமாக இது அமைந்துள்ளது.
தற்போது தரைத்தள மற்றும் அடித்தளக் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், வரும் 2028-ஆம் ஆண்டுக்குள் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கோவையின் ஏற்கனவே உள்ள புரூக்ஃபீல்ட்ஸ் மற்றும் புரோசோன் மால்களை விட இது மிகப்பெரியதாக இருக்கும் என்பதால், கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதிநவீன வசதிகளுடன் அமையவுள்ள இந்த மால், தென்னிந்தியாவின் முக்கியமான ஷாப்பிங் மையங்களில் ஒன்றாக கோயம்புத்தூரை நிலைநிறுத்தும் என்பதில் ஐயமில்லை.
கோவையில் ஏற்கனவே லூலூ ஹைப்பர் மார்க்கெட் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோவையில் பீனிக்ஸ் மால் அங்கே கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமானம் அதிகாரபூர்வமாக தொடங்கி உள்ளது. பிரபல மால்கள் பல அடுத்தடுத்து கட்டப்பட்டு வரும் நிலையில் இப்போது பீனிக்ஸ் மால் அங்கே வர உள்ளது. ஃபீனிக்ஸ் நிர்வாக இயக்குனரின் கூற்றுப்படி, தற்போது அதன் போர்ட்ஃபோலியோவின் கீழ் 10 மால்கள் இயங்கி வருகின்றன.
அதோடு இந்தியா முழுவதும் 3 மால்கள் கட்டப்பட்டு வருகின்றன. கோயம்புத்தூர், ஜெய்ப்பூர், சண்டிகர் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஒரு மால் கட்டப்பட உள்ளது.
ஏற்கனவே லுலு மால் ஹைப்பர் மார்க்கெட் கோயம்புத்தூரில் உள்ள லட்சுமி மில் வளாகத்தில் கட்டப்பட்டு உள்ளது. லுலு மால் கோயம்புத்தூர் கிட்டத்தட்ட 1.1 லட்சம் சதுர அடி இடத்தைக் கொண்ட இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஹைப்பர் மார்க்கெட் ஆகும்.
இந்த மால் லுலு குரூப் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு சொந்தமானது. அங்கு உள்ள இரண்டு வணிக வளாகங்களில் ரூ.2,500 கோடியும், உணவு பதப்படுத்தும் பிரிவில் ரூ.1,000 கோடியும் முதலீடு செய்ய உள்ளது. இந்த மால் 14 ஜூன் 2023 அன்று திறக்கப்பட்டது.
இப்படி கோவையில் பிரபல மால்கள் பல அடுத்தடுத்து கட்டப்பட்டு வரும் நிலையில் பீனிக்ஸ் மால் அங்கே கட்டப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
பைவ் ஸ்டார் ஹோட்டல்கள்; மால்கள் மட்டுமின்றி பைவ் ஸ்டார் ஹோட்டல்கள் கூட கோவையில் வர தொடங்கி உள்ளன.
தமிழ்நாட்டில் சென்னை தாண்டி மற்ற மாவட்டங்களில் 5 நட்சத்திர, 3 நட்சத்திர ஹோட்டல்களை திறக்க மிகப்பெரிய ஹோட்டல் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இனி தமிழ்நாட்டின் தொழில்துறைப் பகுதிகளில் வேலை நிமித்தமாகப் பயணம் செய்பவர்கள் விரைவில் நல்ல ஹோட்டல்களில் தங்க முடியும். தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இருக்கும் இடங்களிலெல்லாம் பெரிய நிறுவனங்கள் ஹோட்டல்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தியா முழுவதிலும் உள்ள பெரிய ஹோட்டல் பிராண்டுகள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பெரிய ஹோட்டல்கள் தொழில்துறைகள் அதிகம் உள்ள சிறிய நகரங்களில் சொகுசு ஹோட்டல்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளன. கிருஷ்ணகிரி, ஓசூர், பெருந்துறை, கோவை, தூத்துக்குடி போன்ற இடங்களும், சென்னைக்கு அருகில் உள்ள ஒரகடம்-ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளும் ஹோட்டல் நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளன.
இங்கே சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அதீத முதலீடுகள் காரணமாக தொழிற்புரட்சிகள் நடக்க தொடங்கி உள்ளன. இதை மனதில் வைத்தே ஹோட்டல் நிறுவனங்கள் திறக்கப்பட உள்ளன. உதாரணமாக, ஐடிசி லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான பார்ச்சூன் பார்க் ஹோட்டல் லிமிடெட், ஜனவரி மாதம் கிருஷ்ணகிரியில் 107 அறைகள் கொண்ட ஹோட்டலைத் திறந்தது. ஓசூர் பல தொழிற்சாலைகளுக்கு அருகில் இருப்பதால், அவர்களின் வணிகத்திற்கு பெரும் வாய்ப்பு உள்ளது. மற்றொரு நிறுவனமான ஜிஆர்டி ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்தது.
அதேபோல் ஓசூர், ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் புதிய ஹோட்டல்களை கட்ட முடிவு செய்துள்ளது. ஆட்டோமொபைல், பர்னிச்சர் மற்றும் விண்வெளி போன்ற தொழில்களில் திட்டங்கள் மற்றும் தூத்துக்குடி VOC துறைமுகத்தின் மேம்பாடுகளால் இங்கே புதிய பெரிய நிறுவனங்களின் ஹோட்டல்கள் வர தொடங்கி உள்ளன.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications