கோவையில் ஆசிரியையுடன் ஓட்டலில் ரூம் போட்ட ஆசிரியர்.. வில்லங்கமான வீடியோ வேறு.. சிக்கியது எப்படி?
கோவை : கோவையில் தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியை உடன் தனிமையில் இருந்த உடற்கல்வி ஆசிரியர், வீடியோவை வெளியிடாமல் இருக்க அவரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் பேரில் அந்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையை சேர்ந்தவர் 26 வயதாகும் அஜித்குமார் கோவை அருகே காரமடையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராக வேலை செய்து வந்தார். அதே பள்ளியில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெண் ஆசிரியை (25 வயது) வேலை செய்து வந்தார் . ஒரே பள்ளியில் பணியாற்றி வந்த அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது.

இந்த நிலையில் தனியார் பள்ளி ஆசிரியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோவை காளப்பட்டியில் உள்ள வேறு பள்ளியில் பணிக்கு சேர்ந்தார். இதற்காக அங்கு ஒரு பிஜியில் தங்கி, பணிக்கு சென்று வந்தார். சம்பவம் நடந்த போது அஜித்குமார், அந்த ஆசிரியையிடம் தனது பெற்றோரை அறிமுகம் செய்து வைப்பதாக கூறியுள்ளார்.. மேலும் கோவை வந்து ரயில் நிலையம் அருகே ஒரு ஓட்டலில் தங்கி இருப்பதாகவும், நாம் அங்கு சென்று திருமணத்திற்கு சம்மதம் பெறலாம் என்றும் கூறி நம்பிக்கையாக பேசினாராம்.
அஜித்குமாரின் வார்த்தைகளை நம்பிய ஆசிரியை, அவருடன் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டலுக்கு சென்றார். அங்கு அஜித்குமாரின் பெற்றோர் இல்லை. இது பற்றி அவர் கேட்ட போது அஜித்குமார் சிறிது நேரத்தில் வந்து விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர், ஜூஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதில் மயக்க மருந்து கலந்து இருந்ததால், அதை குடித்ததும் ஆசிரியை மயக்கமடைந்தாராம்.
அந்த நேரத்தை பயன்படுத்தி அஜித்குமார், அந்த ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து உள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த ஆசிரியையிடம் தனது பெற்றோரை வேறொரு நாள் சந்திக்கலாம் என்று அழைத்து சென்றுள்ளார். அவர், சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த ஆசிரியையை ஓட்டலுக்கு அழைத்திருக்கிறார். அதற்கு தனியார் பள்ளி ஆசிரியை மறுப்பு தெரிவித்துள்ளார்.
உடனே அஜித்குமார், தனிமையில் இருந்த வீடியோவை காட்டி, தன்னுடன் வரவில்லை என்றால் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிடப் போவதாக கூறி அந்த ஆசிரியையை மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்து போன அந்த ஆசிரியை அவருடன் ஓட்டலுக்கு சென்றார். இது போல் தனிமையில் இருந்த வீடியோவை காட்டி அஜித்குமார் அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
இதில் தனியார் பள்ளி ஆசிரியை கர்ப்பம் அடைந்திருக்கிறார். இதையடுத்து அஜித்குமார், தனது பெற்றோருடன், ஆசிரியை தங்கி இருந்த விடுதிக்கு சென்றுள்ளார். அவர்கள் அந்த ஆசிரியையிடம், திருமணம் செய்து வைப்பதாக நம்பிக்கையாக பேசியதுடன் அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தனர்.
இதையடுத்து அந்த ஆசிரியை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அஜித் குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த அஜித்குமார், தனது பெற்றோருடன் சேர்ந்து அந்த ஆசிரியையை மிரட்டினாராம். தனிமையில் இருந்த போது எடுத்த அந்தரங்க வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று கேட்டு அஜித்குமார் மிரட்டினாராம். இது குறித்து அந்த ஆசிரியை கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பதுருன்னிசா பேகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடற்கல்வி ஆசிரியர் அஜித்குமாரை கைது செய்தனர். அஜித்குமார் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications