Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவை தேர்தல் களத்தை தமிழ்நாடை உற்று நோக்கி கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜிக்கு எதிராக கோவை தெற்கு தொகுதியில் பிரச்சாரம் செய்த பியூஷ் கோயல் டங் ஸ்லிப்பாக உளறியுள்ளார். இதனால் திமுகவினர் உற்சாகமடைந்தனர்.

மத்திய அமைச்சரும், பாஜக தமிழக பொறுப்பாளருமான பியூஸ் கோயல் 2 நாட்கள் பயணமாக கோவை வந்துள்ளார். நேற்று கோவையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று மாலை பியூஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். இதற்காக அங்கு வைக்கப்பட்ட பேனரில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பியூஷ் கோயல், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் படம் இடம்பெற்றிருந்தன.

Senthil Balaji Piyush Goyal

அண்ணாமலை படம் புறக்கணிப்பு

அதேபோல மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன், பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் அண்ணாமலையின் படம் இடம்பெறவில்லை. இது அவரின் ஆதரவாளர்களிடம் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

செய்தியாளர் சந்திப்புக்கு பிறகு பியூஸ் கோயல், தே.ஜ. கூட்டணியின் கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்சுணனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் பிரச்சார வாகனம் மூலம் சென்று அவர் வாக்கு கேட்டார். அப்போது பேசிய பியூஸ் கோயல், "கோவை மக்கள் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. கோவை மக்கள் கடுமையாக உழைக்க கூடியவர்கள்

திமுகவுக்கு சேலஞ்ச்

இந்த அரசாங்கம் மோசமான அரசாங்கம். திமுக ஊழல் ஆட்சியை எதிர்த்து சேலஞ்ச் செய்ய வந்துள்ளோம்., ஒரே ஒரு குடும்பம் இங்கு ஆட்சி செய்கிறது. இந்த தொகுதியில் உறுதியாக வெற்றி பெறுவோம். இது முக்கியமான தருணம். தமிழகத்தின் கலாச்சாரத்தை பண்பாட்டை இழிவு படுத்து வருகிறது. ஊழல் ஆட்சியில் முதல் ஆட்சி திமுக ஆட்சி. செந்தில்பாலாஜி அதிகமுறை ஊழல் செய்தவர், மின்சார துறையிலும், டெண்டர்களிலும் ஊழல் செய்துள்ளார்.

மக்கள் பலரையும் இந்த ஆட்சி துன்புறுத்துகிறது. விலைவாசி உயர்வால் மக்கள் கஷ்டபடுகிறார்கள். இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக உங்கள் தேவைகளை தீர்த்து வைக்க மண்ணின் மைந்தன் அம்மன் அர்சுணன் வெற்றி பெற வேண்டும். கடின உழைப்பால் உயர்ந்தவர் அம்மன் அர்சுணன். அவர் இங்கு எம்எல்ஏவாக இருந்த போது அதிக திட்டங்களை கொண்டு வந்தார். ஜெயலலிதா மற்றும் எடப்பாடியார் முதல்வராக இருந்த போது கோவைக்கு பல்வேறு திட்டங்கள் வந்துள்ளன.

ஊழல் வழக்குகள்

உக்கம் மேம்பாலம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என பல்வேறு நல்ல திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளன. கோவையில் குப்பைகள் சரிவர எடுக்கப்படுவதில்லை, குடிநீர் பிரச்சனை உள்ளது மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள். ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி சபரீசன் என ஒரே குடும்பம் ஊழல் செய்து வளர்ந்துள்ளார்கள். ஊழலை தவிர வேறு ஏதாவது இந்த குடும்பம் செய்துள்ளதா.

எதை எடுத்தாலும் மத்திய அரசை மட்டுமே குறை கூறுகிறார்கள். 5 ஆண்டுகள் ஸ்டாலின் ஆட்சி ஊழல் மட்டுமே தவிர வளர்ச்சி எதுவும் இல்லை. செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் கைது செய்யபட்டவர், திமுகவின் கோவை கலெக்சன் ஏஜெண்ட் செந்தில் பாலாஜி. லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிப்பட்டவர் அவர் செந்தில் பாலாஜியை வீழ்த்துவதால் யாருக்கும் தொந்தரவு வராது.

வேண்டும் செந்தில் பாலாஜி

ஜெயலலிதாவின் ஆட்சிக்கு மீண்டும் தமிழகத்திற்கு வர வேண்டும். அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும், ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். குடும்பத்தினர்களிடம், உடன் பணி புரிபவர்களிடம் எடுத்து கூறுங்கள். செந்தில்பாலாஜியை தோற்கடிக்க வேண்டும். திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்" என்றார். பியூஷ் சில வார்த்தைகள் தமிழில் பேசினார். 'வணக்கம்' என்று கூறினார்.

'வேண்டாம் உதயநிதி' என்று பேசினார். இதேபோல 'வேண்டாம் செந்தில் பாலாஜி' என்று சொல்வதற்கு பதிலாக தமிழை சரியாக உச்சரிக்க முடியாமல் டங் ஸ்லிப் ஆகி 'வேண்டும் செந்தில் பாலாஜி' என்று கூறினார். இதனால் அதிமுக - பாஜகவினர் குழப்பமடைந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+