ஜான் பாண்டியன் எங்கே.. வலை விரிப்பு.. தொழிலதிபரை கொல்ல முயன்ற 7 பேர் அதிரடி கைது.. கோவையில் பரபரப்பு
தொழிலதிபரை தாக்கிய வழக்கில் ஜான்பாண்டியனை போலீசார் தேடி வருகின்றனர்
கோவை: தொழிலதிபரை கொல்ல முயன்றது தொடர்பான வழக்கில் விசாரணை நடத்த, தமிழக முன்னேற்ற கட்சியின் நிறுவனர் ஜான் பாண்டியனை விசாரிக்க தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.
கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் வசித்து வருபவர் தீபக் அரோரா.. 39 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் பிரியா..
துருவ் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் டூவீலர்களுக்கு உரிய எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் மற்றும் ஹெல்மெட் விற்பனையகம் ஒன்றை தீபக் அரோரா நடத்தி வருகிறார்...

நாலரை சென்ட்
பிரியா அரோரா பெயரில் கடந்த 2018ம் ஆண்டு மணியகாரம்பாளையம் பகுதியில் நாலரை சென்ட் இடத்தை வாங்கி அங்கு தனது விற்பனையகத்தை நடத்திவருகிறார். இந்நிலையில் பிரியா அரோராவிற்கு வேறு ஒரு இளைஞருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும் அதை அறிந்து தீபக் அரோரா அவரை கண்டித்ததாகவும் தெரிகிறது.. இதனால், பிரியா கணவனை விட்டு பிரிந்து சென்றார்..

ஜான் பாண்டியன்
அதற்கு பிறகு தீபக் அரோரா, பிரியா பெயரில் வாங்கி உள்ள சொத்துக்களை கைப்பற்ற முயற்சி செய்தார்... இதனால் பிரியா கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்...மற்றொரு பக்கம் தீபக், சொத்துக்கள் குறித்து சிவில் கோர்ட்டில் பிரியா மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த சூழலில், தனது கணவனை மிரட்டுவதற்காக, பிரியா சிலரை அணுகியுள்ளார்...

தீபக்
அப்போது பிரியாவின் சொத்துக்கள் உள்ள இடத்தில் தீபக்கின் குடோன் உள்ளது.. அதை காலி செய்ய சொல்லி பிரியா கேட்டுக்கொண்டதாக சிலர் தீபக்கை வலியுறுத்தி வந்துள்ளனர்.. கடந்த சில மாதங்களாக தீபக்கை மிரட்டி இடத்தை காலி செய்யும்படி சொல்லி வந்தனர்.. ஆனால், இதற்கு தீபக் மறுத்து வந்துள்ளார்.

ஆயுதங்கள்
எனவே, நேற்று அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த சிலர் தீபக்கை தாக்கி உள்ளனர்.. இதில் படுகாயமடைந்த தீபக் போலீசில் புகார் தந்தார்.. அந்த புகாரின்பேரில் போலீஸார் தீபக்கை தாக்கிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் ஜான் பாண்டியன் சொல்லித்தான் தாங்கள் தீபக்கை தாக்க வந்ததாக தெரியவந்தது. இதையடுத்து தமுக தலைவர் ஜான் பாண்டியனை விசாரிப்பதற்காக தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர். போலீஸார் அவரிடம் நடத்தும் விசாரணையில் தகவல் உண்மை என தெரியவந்தால் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

பரபரப்பு
இந்த கொலை முயற்சிக்கும் ஜான் பாண்டியனுக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்... இதனிடையே, தீபக் அரோரா கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளார்... இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications