கோவையில் 12 இடங்களில்.. ஆங்காங்கே கிடந்த "மர்ம" உடல் பாகங்கள்.. எடுத்து பார்த்தால் ஷாக்.. பின்னணி!
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் 12 வெவ்வேறு இடங்களில் ஆண் ஒருவரின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூரில் கடந்த 15ம் தேதி பல்வேறு இடங்களில் ஆண் ஒருவரின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. துடியலூர், சர்வனம்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் இந்த உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஒரு இடத்தில் தலை, ஒரு இடத்தில் கை, ஒரு இடத்தில் உடல் என்று பாகங்கள் தனி தனியாக கிடந்தன. இது அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போலீசார் விசாரணை
உடனே போலீசாருக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் உடல் பாகங்களை மீட்டு விசாரணையில் குதித்தனர். மொத்தம் 15 இடங்களில் இப்படி உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சில இடங்களில் குப்பை தொட்டியிலும், சில இடங்களில் சாலையிலும் இந்த உடல் பாகங்கள் கிடந்தன. இதையடுத்து எஸ்பி பத்ரிநாராயணன் தலைமையில் இதை கண்டுபிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டது. மொத்தம் 250 சிசிடிவி கேமராக்கள் இதற்காக ஆய்வு செய்யப்பட்டன .

250 சிசிடிவி கேமராக்கள்
மொத்தம் 50 இடங்களில் இதற்காக சோதனை செய்யப்பட்டது. அதேபோல் 150 தொழிற்சாலைகள், 15 மருத்துவமனைகள் சோதனை செய்யப்பட்டன. சந்தேகத்திற்கு இடமான 500 பேரிடம் விசாரணை செய்யப்பட்டது. கோயம்பத்தூரில் கடந்த சில மாதங்களில் காணாமல் போன 500 பேரின் புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்ட உடலுடன் ஒத்துபோகிறதா என்றும் சோதனை செய்யப்பட்டது. ஆனால் எதிலும் சின்ன துப்பு கூட துலங்கவில்லை. ஒரு சிசிடிவியில் மட்டுமே ஒரு குழு உடலை தூக்கி வீசியது தெரிந்தது. ஆனால் அதில் காட்சிகள் தெளிவாக இல்லை.

விசாரணை
இந்த விசாரணை நடந்து வந்த நிலையில்தான் பி சுருதி என்ற பெண் ஈரோட்டில் சூரம்பட்டி காவல்நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என்று புகார் அளித்தார். கோவை போலீசாருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. கடத்த செப்டம்பர் 14ம் தேதியில் இருந்து தனது கணவரை காணவில்லை என்று அந்த பெண் புகார் அளித்தார். இதற்கு மறுநாள்தான் ஆணின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் கோவை போலீசாருக்கு இந்த தகவல் உடனே தெரிவிக்கப்பட்டது.

சுருதி
இதையடுத்து அந்த பெண்ணை அழைத்து வந்து உடலை அடையாளம் காட்ட சொன்னார்கள். ஆனால் முகம் சிதைந்து இருந்த காரணத்தால் உடலை அடையாளம் காட்ட முடியவில்லை. இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் பிரபுவின் கை ரேகை பிரிண்டுகள் அவரின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டன. இந்த பிரிண்டுகளை வைத்தும், கண்டுபிடிக்கப்பட்ட உடல் பாகங்களில் உள்ள ரேகைகளை வைத்தும் ஒப்பீடு செய்யப்பட்டது. அதில், கண்டுபிடிக்கப்பட்ட உடல் அந்த பெண்ணின் கணவர் பிரபுவிற்கு சொந்தமானதுதான் என்று உறுதி செய்யப்பட்டது.

உறவு
விசாரணையில் கோயம்புத்தூரில் உள்ள சர்வனம்பட்டி என்று பகுதியில் கவிதா என்ற பெண்ணுடன் அவர் நெருக்கமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண் நடத்திய பார்லர் ஒன்றில்தான் பிரபு வேலை பார்த்து வந்துள்ளார். இதை வைத்தே கவிதாவை போலீசார் நெருங்கி உள்ளார். கவிதாவுடன் அவர் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. பிரபுவிற்கு கவிதாவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதல் ஒன்றில், கவிதாவின் அந்தரங்க புகைப்படங்களை லீக் செய்துவிடுவேன் என்று பிரபு மிரட்டியதாக கூறப்படுகிறது.

மிரட்டல்
இப்படி மிரட்டி கவிதாவிடம் பிரபு நிறைய பணம் கேட்டுள்ளார். இதன் காரணமாக கோவம் அடைந்த கவிதா, தன்னுடைய நண்பர்கள் கணபதி, கார்த்திக் என்ற இரண்டு பேரின் உதவியுடன் பிரபுவை கொன்று உள்ளார். கோவில் ஒன்றுக்கு செப்டம்பர் 14ம் தேதி வரவழைத்து அங்கே பிரபுவை இவர்கள் அடித்தே கொன்றது தெரியவந்தது. இதையடுத்து உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி அதை பிளாஸ்டிக் பேக்கில் போட்டு கோவையில் பல இடங்களில் போட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 3 பேரையும் கைது செய்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications