மேட்டுப்பாளையம் - கோவை ரயிலில்.. மாணவிகளை ஆபாச படம் எடுத்த ரோமியோ.. ஆப்புவைத்த மாணவிகள்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயிலில் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளை தொடர்ந்து ஆபாச படம் எடுத்து துன்புறுத்தி வந்த வழக்கறிஞரை மேட்டுப்பாளையம் ரயில்வே போலீஸார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல, கடந்த ஆண்டு வடகோவை ரயில் நிலையத்திலும் ஆபாசமாகப் பெண்கள் மற்றும் மாணவிகளைப் புகைப்படம் எடுத்தபோது பொதுமக்கள் சேர்ந்து இதே நபருக்கு தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டத்துக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் இருந்தும் பொதுமக்கள் கல்வி, வேலை, தொழில்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கு என இங்கு வந்து செல்வது வழக்கம். கோவை மாவட்ட மக்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பது ரயில் போக்குவரத்தும், பேருந்து போக்குவரத்தும்தான்.
கோவை மாவட்டத்தில் அதிக அளவிலான கல்வி நிறுவனங்கள் இருப்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் பேருந்து மற்றும் ரயில்களில் கல்லூரிகளுக்கு வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயிலில் பெண்கள் மற்றும் மாணவிகளை ஆபாசப் படம் எடுத்ததாகவும், தொடர்ந்து மாணவிகளைப் பின்தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் அந்த நபரை போலிஸார் கைது செய்து விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு மெமு ரயில் இயக்கப்படுகிறது. இந்த மெமு ரயிலில் கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு அண்மைக்காலமாக தொடர்ந்து ஒரு நபர் தொந்தரவு கொடுத்து வருவகிறார் என்று மேட்டுப்பாளையம் ரயில்வே காவல் நிலையத்தில் மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் ரயில்வே போலீஸார் அந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் விசாரணையில், அந்த நபர் மேட்டுப்பாளையம், முனிசிபல் காலனியில் உள்ள மணி நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரசாக் (40) என்பதும், வழக்கறிஞர் என்பதும் தெரியவந்தது. இவர் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்படும் மெழு ரயிலில் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதோடு அந்த ரயிலில் வரும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளைப் பின்தொடர்ந்து ஆபாசமாக புகைப்படம் எடுத்து வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அப்துல் ரசாக்கின் மீது மேட்டுப்பாளையம் ரயில்வே காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்துல் ரசாக் கடந்த ஓராண்டுக்கு முன்பே வடகோவை ரயில் நிலையத்தில் இதேபோல கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை புகைப்படம் எடுத்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை வெழுத்துக் கட்டியுள்ளனர். பின்னர், அவரைப் பிடித்து தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததும் குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை தொடர்ந்து பாலியல் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. வீடு, கல்லூரிகள், பொது இடங்கள், பள்ளிகள் என அனைத்துப் பகுதிகளுமே பெண்களுக்கு பாதுகாப்பற்ற பகுதியாக மாறி வருகின்றன. இந்நிலையில், வேலை மற்றும் படிப்புக்காக செல்லும் மாணவிகள், பெண்களை ஆபாச படம் எடுத்து தொந்தரவு செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications