அண்ணா சாப்பிடாதீங்க ப்ளீஸ்.. பிரியாணி இலையை பீடித்துண்டு என நினைத்து.. ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பிரபல அசைவ ஹோட்டலில் பிரியாணியை ஆர்டர் செய்த இளைஞர் மது போதையில் இருந்ததால் பிரியாணியில் இருந்த பிரியாணி இலையை பீடித்துண்டு என நினைத்து ஹோட்டலுக்கு நேரடியாகச் சென்று ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியில் எஸ். எஸ். ஹைதராபாத் பிரியாணி என்ற பிரபல அசைவ உணவகம் இயங்கி வருகின்றது. இந்த உணவகத்தில் சத்தியநாராயணன் என்ற இளைஞர் ஒருவர் பிரியாணியை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துள்ளார். போதையில் இருந்த இவர் ஆர்டர் செய்த பிரியாணியை சாப்பிட்டுள்ளார்.

மதுபோதையில் பிரியாணியை சத்தியநாராயணன் ருசித்துக் கொண்டிருந்தபோது சத்தியநாராயணன், வாயில் ஒரு இலை தட்டுப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த இலையை பீடித்துண்டு என்று கடும் ஆத்திரமடைந்துள்ளார் சத்தியநாராயணன். இதையடுத்து, காந்திபுத்தில் உள்ள எஸ்.எஸ் பிரியாணி கடைக்கு நேரில் சென்று சண்டை போட்டுள்ளார்.
போதை தலைக்கேறிய நிலையில் ஹோட்டலில் ரகளையில் ஈடுபட்டது குறித்த தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது, விசாரிக்க வந்த போலீசாரையும் அந்த இளைஞர் வசைபாடி இருக்கின்றார். ரோட்டில் நின்று கூச்சலிட்டு போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருந்திருக்கின்றார். இதையடுத்து எஸ். எஸ். பிரியாணி தரப்பில் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட போதை நபர் சத்தியநாராயணனை அழைத்து போலீசார் விசாரித்து இருக்கின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் சத்திய நாராயணன் பிரியாணி இலையை உட்கொண்டு விட்டு, பீடி இலை என்று உளறியது தெரியவந்துள்ளது. போதை தெளிந்த பிறகு காவல் நிலையத்தில், தான் தவறு செய்து விட்டதாகவும், இனி இதுபோன்று நடந்து கொள்ள மாட்டேன் என்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் தந்திருக்கின்றார்.

பிரியாணி கடை ஊழியர்களை மட்டுமல்லாமல் விசாரணைக்கு சென்ற போலீசாரையும் தவறாக வசை பாடி, நடுரோட்டில் சாலை போக்குவரத்துக்கு இடையூறாக தகராறில் ஈடுபட்டதாலும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் சாலை போக்குவரத்துக்கு இடையூறாகவும் செயல்பட்டதாக சத்தி நாராயணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து அவரது குடும்பத்தாரிடம் விசாரித்தபோது, சத்தியநாராயணன் மனரீதியாக மிகுந்த அழுத்தத்தில் உள்ளதாகவும், அவ்வப்போது இதுபோன்று நடந்து கொள்வதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், தற்போது சத்யநாராயணன் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். மது போதையில் பிரியாணி இலைக்கும் , பீடி இலைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஹோட்டலில் இளைஞர் தகராறில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications