"ஆஸ்பத்திரி அவசரம்".. Gpay மூலம் 112 பேரிடம் நூதன மோசடி.. உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கோவை தம்பதி கைது
கோவை: மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும், அதனால் அவசரமாகப் பணம் தேவை என்று கூறி ஜிபே மூலம் பணம் அனுப்பியதாகக் காட்டிவிட்டு 112 பேரிடம் நூதன முறையில் மோசடி செய்த கோவையைச் சேர்ந்த காதல் தம்பதியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், தெலுங்கு பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் சங்கனூர், நல்லாம்பாளையம் சாலையில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை மூடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அவருடைய கடைக்கு ஒரு இளம் தம்பதி வந்துள்ளனர்.

அவர்கள் சக்திவேலிடம் நாங்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்தோம். ஏடிஎம் கார்டில் பணம் உள்ளதால் மருத்துவமனைக்கு வரும் அவசரத்தில் பணத்தை எடுக்காமல் வந்துவிட்டோம். இங்குள்ள ஏடிஎம் இல் பணம் எடுப்பதற்காகச் சென்றோம். ஆனால், ஏடிஎம் கார்டு வேலை செய்யவில்லை.
மருத்துவமனையில் சிகிச்சை பெற அவசரமாக 2,000 ரூபாய் தேவைப்படுகிறது. உங்களிடம் கையில் இருக்கும் பணத்தைக் கொடுத்தால் எங்களது செல்போனில் இருந்து ஜிபி மூலம் பணம் அனுப்பி விடுகிறோம் என்று கூறி உள்ளனர். மெடிக்கல் எமர்ஜென்சி எனக் கூறியதை நம்பி சக்திவேல் அவர்களிடம் 2,000 ரூபாயைக் கொடுத்துள்ளார். அதை வாங்கிக் கொண்டவர்கள் ஜிபே மூலம் பணத்தை அனுப்பிவிட்டதாக கூறி தங்களது செல்போனில் இருந்து குறுஞ்செய்தியை சக்திவேலிடம் காண்பித்துள்ளனர்.
சக்திவேலும் அந்த குறுஞ்செய்தியைப் பார்த்து நம்பியுள்ளார். அதைத்தொடர்ந்து, அவர்கள் இன்னும் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் அதனை ஜிபே மூலம் அனுப்பி விடுவதாகக் கூறியுள்ளனர். இதை நம்பி சக்திவேல் மீண்டு ரூ. 2,000 பணத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்துள்ளார். மீண்டும் அவர்கள் ஜிபே குறுஞ்செய்தியைக் காண்பித்துள்ளனர்.
பின்னர், சிறிது நேரத்திற்குப் பின்னர் சக்திவேல் தனது வங்கி கணக்கு இருப்பை சரிபார்த்துள்ளார். அப்போதுதான், அந்த தம்பதி 4 ஆயிரம் ரூபாய் அனுப்பியதாகக் கூறிய பணம் வரவில்லை என்பதையும், தன்னிடம் 4 ஆயிரம் ரூபாயை மோசடி செய்து விட்டு தப்பிச் சென்றதும் சக்திவேலுக்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக கவுண்டம்பாளையம் காவல் நிலையத்துக்குத் சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இதேபோல இந்த தம்பதி பலரிடம் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து காவல் ஆணையர் சரவண சுந்தர் மோசடி செய்த தம்பதியைப் பிடிக்க தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் மோசடி தம்பதி வந்த இருசக்கர வாகனங்கள் பதிவினை காவல் துறையினர் கண்டறிந்தனர். இதுதொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த தம்பதி சுகுணாபுரம் பழைய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது ரிஸ்வான், அவரது மனைவி ஷர்மிளா பானு என்பதும், அவர்கள் இரண்டு பேரும் காதலித்து ஒன்றரை மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அந்த தம்பதியை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில், அந்த தம்பதி மொத்தம் 112 பேரிடம் ரூ. 2 லட்சத்துக்கு மேல் பண மோசடி செய்தது தெரியவந்துள்ளது. பின்னர், அவர்கள் இருவரையும் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதகுறித்து காவல் துறையினர் கூறியதாவது: கைதான ரிஸ்வான் முன்பு கால் டாக்ஸி டிரைவராக வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்பொழுது ஒரு டிரைவர் நூதன முறையில் பணத்தை இழந்ததாகக் கூறினார். அதாவது செல்போனில் ஜிபேயில் பணம் அனுப்பும்போது பே மற்றும் ரிக்வஸ்ட் என இரண்டு குறியீடுகள் வரும், அதில் பே என்று குறியீட்டை அழுத்தினால் பணம் போகும்.
ரிக்வஸ்ட் என்று குறியீட்டை அழுத்தினால் பணம் போகாது. உங்களிடம் பணம் கேட்கிறார் என்று குறுஞ்செய்தி மட்டும் வரும். இதை சிலர் சரியாக கவனிக்காமல் அந்த குறுஞ்செய்தியைப் பார்த்ததும் பணம் வந்துவிட்டதாக நினைத்து விடுகிறார்கள். இதைத் தெரிந்து கொண்ட ரிஸ்வான் தனது காதல் மனைவியுடன் சேர்ந்து பலரிடம் நூதன முறையில் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பணம் இழந்தவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டால் உடனடியாக அவர்கள் எண்ணை பிளாக் லிஸ்டில் போட்டு வைத்துள்ளனர். சிறிய தொகை தானே என்று பலரும் புகார் செய்யாமல் இருந்துள்ளனர். வாடகை வீட்டில் வசித்து வந்த காதல் தம்பதி மோசடி செய்த பணத்தை வைத்து சொகுசு பொருள்களை வாங்கி உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications