அடுக்கடுக்கான கேள்விகள்! கோடநாடு கொலை கொள்ளை வழக்கு.. சயானிடம் போலீசார் தீவிர விசாரணை
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தற்போது ஜாமீனில் உள்ள சயானிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களா அமைந்துள்ளது.
இந்த கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017இல் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்தது. இந்த வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

கோடநாடு வழக்கு
இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவ்வழக்கு தொடர்பாகக் கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர். இவர்கள் இப்போது ஜாமீனில் உள்ளனர். இவ்வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்டு முதல் மறு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் கோவை, சேலம், நீலகிரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் 220க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணை
இந்த வழக்கில் விசாரணை நடத்தக் கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் நேரடி மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த வழக்கு விசாரணை சில வாரங்களாகவே மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது. இத்தனிப்படை போலீசார் வழக்கில் ஏற்கனவே கைதானவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், சந்தேகத்துக்குரிய நபர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சயான்
அதன்படி கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சேலத்தில் வசித்து வந்த சயானை விசாரணைக்கு ஆஜராகும்படி தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி, சயான் இன்று (மே 9) மதியம் கோவை போலீஸ் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் கோடநாடு எஸ்டேட் கொள்ளை, கொலை தொடர்பாக பல்வேறு கேள்விகளைக் கேட்டு போலீசார் விசாரித்தனர்.

கேள்வி
சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜூடன் எப்படி அறிமுகம் ஏற்பட்டது, கொள்ளை சம்பவத்துக்குத் திட்டமிட்டது யார், கொள்ளை சம்பவம் எப்படி நடந்தது, இந்த வழக்கில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்புள்ளது என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. மேலும், இந்தச் சம்பவத்தில் அரசியல் பிரமுகர்கள் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் சயானிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications