கோவையில் கல்லூரி மாணவி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது!
Recommended Video

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சதீஷ் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பிரகதி. இவர் கோவை ராமகிருஷ்ணா கலைக்கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார்.
இவர் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்தார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு விடுதியில் இருந்து பிரகதி புறப்பட்டு சென்றுள்ளார். இவரை நேற்று முதல் காணவில்லை என அவரது பெற்றோர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பொள்ளாச்சி- தாராபுரம் சாலையில்
இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காணாமல் போன கல்லூரி
அதேபோல அந்த இளம்பெண் அரை நிர்வாணத்துடன் முட்புதருக்குள் கிடப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில் காணாமல் போன கல்லூரி மாணவி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

விசாரணை
அதேபோல இந்த மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பார் என்ற கோணத்தில் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மர்மநபர்கள்
இந்த நிலையில் கொலையாளியை பிடிக்க தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர். அந்த பெண் கல்லூரி முடித்து விட்டு சென்ற போது அவரை மர்மநபர்கள் பின்தொடர்ந்ததாக தெரிகிறது. கல்லூரியை சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

கொலையாளியை நெருங்கிய போலீஸ்
இந்த நிலையில் கோவை கல்லூரி மாணவி கொலை வழக்கில் ஒருவருக்கு தொடர்பிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்தனர். அதன் பேரில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சதீஷ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications