Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொள்ளாச்சி, குமாரபாளைம்.. தேசிய கட்சிகளை காலுன்ற விடாமல் செய்த ரியல் பராசக்தி வரலாறுகள்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தான், தேசிய கட்சிகளை காலுன்ற விடாமல் செய்த ரியல் பராசக்தி சம்பவங்களாக பார்க்கப்படுகிறது. இந்தி எதிர்ப்பு போராட்டம் 1965ம் ஆண்டு நடந்தது. அப்போது தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களே காங்கிரஸ் தமிழ்நாட்டில் இன்றுவரை ஆள முடியாமல் போக காரணமாக அமைந்தது. காங்கிரஸ் மட்டுமல்ல, பாஜகவும் இன்றுவரை ஜெயிக்க முடியாமல் போனதற்கும் காரணம்.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள 'பராசக்தி' திரைப்படத்தின் டிரெய்லரில் "பொள்ளாச்சியிலேயே அடிச்சி பொள்ளாச்சியிலேயே புதைப்போம்" என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இது 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும், அதில் நடந்த வன்முறையையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதால், பொள்ளாச்சி போராட்டம் மீண்டும் மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pollachi Kumarapalayam real Parasakthi that prevented national parties from gaining a foothold

1965-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில், பொள்ளாச்சி ஒரு மிக முக்கியமான கருப்பு பட்டியலில் இருககிறது. இந்தப் போராட்டம் வெறும் மொழிப் போராட்டமாக மட்டுமில்லாமல், ஒரு பெரும் மக்கள் எழுச்சியாகவும், அதே சமயம் அரசின் ஒடுக்குமுறையால் ரத்தக்களரியாகவும் மாறியிருந்தது.

1965 ஜனவரி 26 முதல் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும் என்ற மத்திய அரசு அறிவித்தது. ஒரே நாடு, ஒரே மொழி என்கிற கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த முடிவை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பொள்ளாச்சியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக வீதியில் இறங்கிப் போராடினார்கள். 1965 பிப்ரவரி மாதம் பொள்ளாச்சியில் போராட்டம் உச்சத்தை எட்டியது.

தமிழ்நாட்டு வரலாற்றிலேயே போராட்டத்தை ஒடுக்க முதன்முறையாக ராணுவம் வரவழைக்கப்பட்டது பொள்ளாச்சியில்தான். பிப்ரவரி 12-ஆம் தேதி பொள்ளாச்சி அஞ்சலகம் அருகே திரண்டிருந்த மக்கள் மீது ராணுவம் இயந்திரத் துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் குறைவாகச் சொன்னாலும், அன்றைய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 200 முதல் 250 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் உண்டு. உயிரிழந்தவர்களில் ஒரு 4 வயது சிறுவனும் அடக்கம் ஆகும. பொள்ளாச்சியில் நடந்த இந்தச் சம்பவம் இந்திய வரலாற்றின் ஒரு "இருண்ட அத்தியாயம்" ஆகும். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல், பொள்ளாச்சி - பழனி சாலையில் உள்ள சுடுகாட்டில் ராணுவத்தினரால் மொத்தமாக எரிக்கப்பட்டதாகக் ஆய்வாளர்கள சொல்கிறார்கள்

1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக, ரத்தம் சிந்திய மற்றொரு முக்கியமான ஊர் குமரபாளையம் (நாமக்கல் மாவட்டம்) ஆகும். இங்கு நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தமிழ்ப் போராட்ட வரலாற்றில் ஒரு மறக்க முடியாத வடுவாக உள்ளது.

1965 பிப்ரவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. ஈரோடு, குமரபாளையம், பள்ளிபாளையம் பகுதி தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு வேலை செய்த தொழிலாளர்களும், மாணவர்களும் பெருமளவில் வீதியில் இறங்கினர். குமரபாளையத்தில் தறித் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். 1965ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி, அதாவது பொள்ளாச்சி சம்பவத்திற்கு முதல் நாளில், குமரபாளையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

குமரபாளையம் காவல் நிலையத்திற்கு முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இந்தித் திணிப்பிற்கு எதிராக முழக்கமிட்டார்கள். இதையடுத்து போலீசார் கூட்டத்தைக் கலைக்க காவல்துறை முதலில் தடியடி நடத்தினார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடப்பட்டது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் அதிகாரப்பூர்வமாக ஒரு சிலர் இறந்ததாகச் சொல்லப்பட்டாலும், உண்மையில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் குண்டு பாய்ந்த நிலையில் ஆற்றில் குதித்து இறந்ததாக கூறப்படுகிறது.

குமரபாளையம் மற்றும் பவானி சுற்றுவட்டாத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐயப்பன், காசிநாதன் உள்ளிட்ட வீரர்கள் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இவர்களின் நினைவாக இன்றும் குமரபாளையத்தில் நினைவிடங்கள் மற்றும் உருவப்படங்கள் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி, குமாரபாளையம் மட்டுமின்றி, சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டம் தான் இந்தி திணிப்பு தமிழ்நாட்டில் நுழைய வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அதேபோல் தேசிய கட்சிகள் தமிழ்நாட்டில் நுழையாமல் போக காரணமாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+