Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்டிசம் பாதித்த இளைஞர் கொலை: குற்றவாளிகளின் நகை, பணத்தை கையாடல் செய்த.. சப்-இன்ஸ்பெக்டர் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை: பொள்ளாச்சியில் காப்பகத்தில் தங்கியிருந்த ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞரை, காப்பக நிர்வாகிகளே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த கொலை வழக்கில் காப்பக உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தைக் கையாடல் செய்ததாக 2 உதவி ஆய்வாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ரத்தின சபாபதிபுரம் பகுதியில் மனநலக் காப்பகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட, ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்கள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்தக் காப்பகத்தில் சூலூர் அருகே உள்ள கரவளி மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த வருண்காந்த் என்ற ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞரும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

pollachi-murder-case-case-filed-against-2-sub-inspectors-for-handling-jewelry-and-money-of-archive

அந்த இளைஞரை காப்பக உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து கடந்த மே 12 ஆம் தேதி கொலை செய்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக காப்பகத்தின் உரிமையாளர்கள் கவிதா, ஷாஜி, கிரி மற்றும் காப்பக நிர்வாகிகள் உள்பட 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.

வருண் கொலைச் சம்பவத்துக்குப் பிறகு கவிதா, அவரது கணவர் லட்சுமணன், ஷாஜி, கிரி ஆகியோர் தலைமறைவாகியிருந்தனர். அவர்களைப் பிடிப்பதற்காக காவல் துறையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. மகாலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் வைத்து கவிதா, லட்சுமணன், ஷாஜி உள்ளிட்டோரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை போலீஸார் கைப்பற்றினர். குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களிடம் இருந்து மீட்கப்பட்டும் பணம், நகைகள் அரசின் கருவூலத்தில் பாதுகாக்கப்படுவது வழக்கம். அவர்கள் விடுதலையாகும் போது அவர்களுடைய பொருள்கள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்படும்.

மாகலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நவநீதிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 18 சவரன் தங்க நகை மற்றும் ரூ.1.50 பணத்தை கைப்பற்றியுள்ளார். ஆனால், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு எந்தவிதமான தகவலையும் அளிக்காமல், அவற்றை கையாடல் செய்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இச்சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காப்பக உரிமையாளர்களிடம் இருந்து நகை மற்றும் பணம் கையாடல் செய்யப்பட்ட விவகாரம் தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் நவநீதகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுமட்டுமல்லாமல் இவ்வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படையில் இருந்த இன்னொரு காவல் உதவி ஆய்வாளரான மகாராஜா, நவநீதகிருஷ்ணனிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் பெற்றதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை சரக டிஐஜி சசிமோகன், மகாராஜாவை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளார்.

குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து உதவி காவல் ஆய்வாளர்களே நகை, பணத்தை கையாடல் செய்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+