1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு.. ரேஷன் கடையில் இன்னும் டோக்கன் வாங்கலையா.. அரசு முக்கிய அறிவிப்பு
கோவை: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் டோக்கன் பெறாதவர்களுக்கு இன்று முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை ரேஷன் கடைகளில் டோக்கன் பெறாத 2½ லட்சம் பேருக்கு இன்று முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.
தமிழர்கள் முக்கியமான பண்டிகையான தைப் பொங்கலை கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். வழக்கமாக பொங்கல் பண்டிகையின் போது தமிழ்நாடு அரசு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்புடன் ரொக்கப்பணத்தை பொங்கல் பரிசுத்தொகுப்பாக வழங்கி வருகிறது.

அந்த வகையில் தமிழக அரசு சார்பில் ரூ.1,000 ரொக்கப்பணத்துடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு உள்ளடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்று முன்தினம் முதல் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்காக வீடு, வீடாக டோக்கன் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 10-ந் தேதி (நேற்று) முதல் 14-ந் தேதி வரை (நாளை மறுநாள்) வரை பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளும் வகையில் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளிலும் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பொங்கல் பரிசுத்தொகுப்பினை முடிந்தவரை வேகமாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வருகிற ஜனவரி 14-ந் தேதி வரை பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளும் வகையில் டோக்கன் வினியோகிக்கப்படுகிறது. அதேநேரம் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் வசிக்கும் ஏராளமானோர் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக இன்றும், நாளை, நாளை மறுநாள் தான் செல்வார்கள் என்பதால், 13, 14 ஆகிய தேதிகளில் டோக்கன் பெற்றவர்கள் பரிசுத்தொகுப்பை குறிப்பிட்ட தேதியில் பெற முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே சொந்த ஊர் செல்பவர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பின்பு பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்பு, ரூ.1,000 ரொக்கப்பணம் ஆகியவற்றை வழங்கப்பட உள்ளது. அதாவது பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் பெறாதவர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 40 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ள்ள நிலையில், இதில் 11 லட்சம் கார்டுகள் அரிசி கார்டுகள் ஆகும். கடந்த ஆண்டு 11 லட்சம் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 8 லட்சத்து 56 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் பொங்கல் தொகுப்பு வழங்க டோக்கன் வினியோகம் செய்யப்பட்டிருந்தது.
அனைத்து அரிசி ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில்,கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நாளில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 864 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
2-வது நாளாக நேற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கும் பணி கோவை மாவட்டம் முழுவதும் நடந்தது. இதில், ஆனைமலை தாலுகாவில் 18 ஆயிரத்து 417 பேருக்கும், அன்னூரில் 19 ஆயிரத்து 61 பேருக்கும், கோவை வடக்கு மண்டலத்தில் 35 ஆயிரத்து 421 பேருக்கும், தெற்கு மண்டலத்தில் 28 ஆயிரத்து 857 பேருக்கும், மேற்கு மண்டலத்தில் 29 ஆயிரத்து 33 பேருக்கும், கிணத்துக்கடவு தாலுகாவில் 10 ஆயிரத்து 703 பேருக்கும், மதுக்கரை தாலுகாவில் 25 ஆயிரத்து 935 பேருக்கும், மேட்டுப்பாளையம் தாலுகாவில் 24 ஆயிரத்து 241 பேருக்கும், பேரூர் தாலுகாவில் 34 ஆயிரத்து 256 பேருக்கும், பொள்ளாச்சி தாலுகாவில் 25 ஆயிரத்து 715 பேருக்கும், சூலூரில் 29 ஆயிரத்து 499 பேருக்கும், வால்பாறை தாலுகாவில் 2 ஆயிரத்து 722 பேருக்கும் என மொத்தம் 2 லட்சத்து 83 ஆயிரத்து 860 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மொத்தம் 5 லட்சத்து 51 ஆயிரத்து 724 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் டோக்கன் பெறாத 2½ லட்சம் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை ரூ.1000 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் அறிவித்துள்ளார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications