மண்ட மேல் கொண்டய மறந்த ஜான் ஜெபராஜ்! குத்தாட்ட போதகர் சிக்கியது எப்படி?பக்கா ஸ்கெட்ச்..சபாஷ் போலீஸ்!
கோவை: இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல பாப் பாடக மத போதகரான ஜான் ஜெபராஜ் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மூணாறில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவர் போலீசாரிடம் சிக்கியது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கோவையைச் சேர்ந்த ஜான் ஜெபராஜ் அங்கு எட்மின் ரூட் என்பவருடன் இணைந்து மத ஆராதனை கூட்டங்களை நடத்தி வந்தார். கோவை கிராஸ்கட் சாலையில் கிங் ஜெனரேஷன் என்ற பிரார்த்தனை கூடத்தை அவர் நடத்தி வந்த நிலையில் சக மத போதகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

மத போதனை நிகழ்ச்சிகளை ஆடல் பாடல் கச்சேரிகள் போல மாற்றி அதில் மக்களை நடனம் ஆட வைத்து தானும் நடனமாடி மத போதனை நிகழ்ச்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரபலமானவர் ஜான் ஜெபராஜ்.
இந்த நிலையில் எட்வின் ரூசோ உடன் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் ஜான் ஜெபராஜ் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் அவர் சில சிறுமிகளை முத்தமிடுவது போல வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு நெருக்கமானவர்கள் தான் அந்த வீடியோக்களை வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஜான் ஜெபராஜ் மீது பாலியல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி ஜான் ஜெபராஜ் இல்லத்தில் பார்ட்டி ஒன்று நடந்ததாகவும் அதில் கலந்து கொள்ள வந்த 17 வயது மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு அவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து தலைமுறைவாக இருந்த ஜான் ஜெபராஜை கைது செய்ய கோவை, தென்காசி, செங்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், பலமுறை வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டு இருப்பதால் ஜான் ஜெபராஜ் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்ததாகவும் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் ஜான் ஜெபராஜ்-க்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பாலியல் தொல்லை வழக்கில் தேடப்பட்டு வந்த ஜான் ஜெபராஜ் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் ஜான் ஜெபராஜ் கைது செய்து கோவை காந்திபுரம் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜான் ஜெபராஜ் சிக்கியது எப்படி என்பது குறித்தான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
தம் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன் ஜான் ஜெபராஜ் தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு கேரள மாநிலம் மூணாறுக்கு தப்பி சென்று இருக்கிறார். அங்கு ஒரு தனியார் ரிசார்ட்டில் அறை எடுத்து தங்கி உள்ளார். இருந்த போதும் அவரது செல்போனில் வேறு சிம்மை பொருத்தி தனது ஆதரவாளர்கள், உறவினர்களுடன் பேசி வந்திருக்கிறார். செல்போன் என்னை மாற்றினாலும் செல்போன் ஐஎம்இஐ நம்பரை வைத்து அவரை டிரேஸ் செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
மேலும் இன்ஸ்டாகிராம் வாட்ஸ் அப் மூலமாக அவர் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் பேசி வந்து நிலையில்தான் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
4 கோடியை ஏப்பம் விட்ட ஆபீசர்ஸ்! தூத்துக்குடி துறைமுகத்தில் ஷாக்! இறந்த ஊழியர்களின் பென்சனில் மோசடி! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications