கோவையில் துடியலூர் - கீரணத்தம் வரை நாளை 7 மணி நேரம் 'பவர்கட்'.. லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க
கோவை: கோவையில் மின் வாரியம் சார்பில் நாளை (திங்கள்கிழமை) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இந்தப் பராமரிப்புப் பணியின் காரணமாக கோவை துடியலூர் மற்றும் கீரணத்தம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு முறையாக மின்சாரம் வழங்கும் வகையில் மாதம்தோறும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வழக்கம். அந்த சமயங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில், கோவை மாவட்டத்தில் சில இடங்களில் மின் வாரியம் சார்பில் பராமரிப்புப் பணிகள் நாளை (பிப்ரவரி 3 ஆம் தேதி) மேற்கொள்ளப்படவுள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது. பீளமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அதனிடமிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.
மின் தடை ஏற்படும் இடங்கள்:- துடியலூர் துணை மின் நிலையம்: துடியலூர், வடமதுரை, அப்பநாயகன்பாளையம், அருணா நகர், வி.எஸ்.கே. நகர், வி.கே.வி நகர், என்.ஜி.ஜி.ஓ. காலனி, பழனிகவுண்டன்புதூர், பண்ணிமடை, தாலியூர், திப்பனுர், பாப்பநாயகன்பாளையம், கே.என்.ஜி. புதூர் மற்றும் வேணுகோபால் ஹாஸ்பிடல்.
கீரணத்தம் துணை மின் நிலையம்: கீரணத்தம், வரதையம்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டி (ஒரு பகுதி), விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சி (ஒரு பகுதி), சிவானந்தபுரம், சத்தி ரோடு, சங்கரா வீதி, விநாயகபுரம், எல்.ஜி.பி.நகர், உதயா நகர், ஹவுசிங் காலனி, அன்னை வேளாங்கண்ணி நகர், சாவித்திரி நகர், கணபதி மாநகர், குறிஞ்சி நகர், சேரன் மாநகர் ரோடு மற்றும் விளாங்குறிச்சி ரோடு.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications