Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈஷா மையத்தில் திரெளபதி முர்மு.. பேட்டரி காரில் சுற்றிவந்து பக்தியோடு வழிபாடு.. கூட யாருனு பாருங்க!

மகாசிவராத்திரியையொட்டி ஜனாதிபதி திரெளபதி முர்மு ஈஷா யோகோ மையத்துக்கு சென்றார். அவருக்கு மாலை அணிவித்து சத்குரு வரவேற்றார்.

Subscribe to Oneindia Tamil

கோவை: மகாசிவராத்திரியையொட்டி ஜனாதிபதி திரெளபதி முர்மு ஈஷா யோகா மையத்துக்கு சென்றார். அவருடன் ஆளுநர் ஆர்என் ரவி, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டவர்கள் சென்றனர். ஜனாதிபதி திரெளபதி முர்முவை, ஈஷா யோகா மையத்தின் சத்குரு மாலை அணிவித்து வரவேற்றார். இதையடுத்து ஜனாதிபதி திரெளபதி முர்மு பேட்டரி காரில் ஈஷா யோகா மையத்தை சுற்றி பார்த்தார். இந்த வேளையில் பேட்டரி காரை சத்குரு ஓட்டி சென்றதோடு, யோகா மையம் மற்றும் அங்குள்ள லிங்கங்கள் பற்றிய விபரங்களை எடுத்து கூறினார். மேலும் திரெளபதி முர்மு தியானலிங்கம், யோகேஸ்வர லிங்கத்தை வழிபாடு செய்தார்.

நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா ஆண்டுதோறும் கோவை ஈஷா யோகா மையத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த விழாவில் கலந்து கொள்ள ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனை திரெளபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து 2 நாள் பயணமாக அவர் தமிழ்நாட்டுக்கு இன்று வருகை தந்தார். ஜனாதிபதியாக தேர்வான பிறகு அவர் முதல் முதலாக தமிழ்நாட்டுக்கு இன்று வந்தார்.

தமிழ்நாட்டுக்கு 2 நாள் பயணம்

தமிழ்நாட்டுக்கு 2 நாள் பயணம்

டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மதுரை வந்த திரெளபதி முர்முவை தமிழக ஆளுநர் ஆர்என்ரவி வரவேற்றார். தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்றார். இதையடுத்து திரெளபதி முர்மு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து தனி விமானத்தில் மதுரையில் இருந்து கோவைக்கு சென்றார். கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அவர் ஓய்வெடுத்தார்.

ஈஷாவில் ஜனாதிபதி

ஈஷாவில் ஜனாதிபதி

அதன்பிறகு கோவை ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க தலைமை விருந்தினராக திரெளபதி முர்மு சென்றார். ஈஷா யோகா மையத்தின் சத்குரு மாலை அணிவித்து வரவேற்றார். இதையடுத்து ஜனாதிபதி திரெளபதி முர்மு பேட்டரி காரில் ஈஷா யோகா மையத்தை சுற்றி பார்த்தார். இந்த வேளையில் பேட்டரி காரை சத்குரு ஓட்டி சென்றதோடு, யோகா மையம் மற்றும் அங்குள்ள லிங்கங்கள் பற்றிய விபரங்களை எடுத்து கூறினார்.

வழிபாடு செய்த ஜனாதிபதி

வழிபாடு செய்த ஜனாதிபதி

ஈஷா மையத்தை வந்தடைந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கு தீர்த்த குளத்தை பார்வையிட்ட பின் அவர் தியான பீடத்தில் வழிபாடு செய்தார். தியானலிங்கம், யோகேஸ்வர லிங்கத்தை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழிபட்டார். இந்த வேளையில் திரெளபதி முர்முவுடன் ஆளுநர் ஆர்என் ரவி, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். இதையடுத்து ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்றுள்ளார்.

நாளை டெல்லி புறப்பாடு

நாளை டெல்லி புறப்பாடு

இன்று இரவு ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் ஜனாதிபதி நாளை காலை 9 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் சென்று போர் நினைவு சின்னத்துக்கு மரியாதை செலுத்துகிறார். பிறகு மதியம் 12 மணிக்கு தனிவிமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். திரெளபதி முர்மு வருகையையொட்டி கோவை, நீலகிரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கோவையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மொத்தம் 5 ஆயிரம் போலீசார் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+