கூட்டணி தலைவர்களுடன் இன்று கோவையில் மோடி பிரச்சாரம்... 2 ஆயிரம் போலீசார் குவிப்பு
Recommended Video

கோவை: பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார். அவர் வருகையை ஒட்டி சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக நடக்கிறது. இதனால் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தவற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கோவை வருகிறார்.

கோவை கொடீசியா
இதற்காக மாலை 6.45 மணி அளவில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வருகிறார் பிரதமர் மோடி. பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோவை கொடீசியா மைதானத்துக்கு செல்கிறார்.

முதல்வர் பங்கேற்பு
அங்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இந்த பிரச்சார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், பாமக தலைவர் ராமதாஸ், தமாக தலைவர் ஜி.கே.வாசன் உள்பட கூட்டணி கட்சியினர் பங்கேற்கிறார்கள். பிரதமர் மோடி பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு இரவு 8.15 மணி அளவில் கோவை விமான நிலையம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பலத்த பாதுகாப்பு
பிரதமர் மோடி இன்று வருவதையொட்டி கோவை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மாநகர கமிஷ்னர் சுமித் சரண் தலைமையில் 2 டிஐஜிக்கள், 5 எஸ்பிக்கள் மற்றும் 4 கூடுதல் டிஎஸ்பிக்கள், 10 டிஎஸ்பிக்கள் என 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் குழுவினர் ஏற்கனவே கோவை வந்து பாதுகாப்பு பணிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

மெட்டல் டிடெக்ட் கருவி
மெட்டல் டிடெக்ட் கருவி மற்றும் மோப்ப நாய்களை வைத்து சோதனை செய்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து கொடீசியா மைதானத்துக்கு பயணம் செய்வதற்காக டெல்லியில் இருந்து கோவைக்கு குண்டு துளைக்காத 4 கார்கள் வந்துள்ளது.
-
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications