கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 2 சேர வந்த நெல்லை மாணவிக்கு வந்த வித்தியாசமான சிக்கல்
கோவை: ஊர் விட்டு ஊர் மாறும் பிளஸ் 2 மாணவிகளுக்கு இப்படியும் சிக்கல் வரலாம். பிளஸ் 1 படிக்கும் போது எடுக்கும் குரூப், நீங்கள் போகும் ஊரில் பிளஸ் 2வில் அதே குரூப் நடத்தும் பள்ளிகள் இருக்க வேண்டும்.. அப்படி இல்லாமல் போனால் சிக்கலை ஏற்படுத்தலாம். திருநெல்வேலியில் இருந்து குடும்பத்துடன் கோவைக்கு வந்த மாணவி இப்படி சிக்கலை சந்தித்துள்ளார். கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-2 சேர்க்கைக்கு அனுமதியே மறுத்துவிட்டார்கள்.
திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டையை சேர்ந்த முவிதா பிளஸ்-1 தேர்வில் வரலாற்று பாடப்பிரிவில் 600-க்கு 331 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இந்தநிலையில் மாணவியின் பெற்றோர் வேலைக்காக கோவை ராமநாதபுரத்திற்கு தற்போது குடி பெயர்ந்துள்ளனர். இதையடுத்து அந்த மாணவி கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிளஸ்-2 வகுப்பில் சேர தனது தாயுடன் கோவை ராமநாதபுரம் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றிருக்கிறார். அங்கு இருந்த பணியாளர்களிடம், பிளஸ்-1 முடித்து இருப்பதாகவும், பிளஸ்-2 படிக்க சேர்க்குமாறு கோரிக்கை வைத்தார்.

ஆனால் அங்கிருந்த பள்ளி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இங்கு பிளஸ்-2 சேர்க்கை வழங்கப்படுவது இல்லை. பிளஸ்-1 வகுப்புக்கு தான் சேர்க்கை நடக்கிறது என்று கூறி மறுத்துள்ளனர். இதனால் அவதியடைந்த மாணவி நேற்று கோவை டவுன்ஹாலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு தனது தாயுடன் சென்று புகார் அளித்தார்.
அங்கிருந்த அதிகாரிகளிடம் சென்று தன்னை ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு சேர்க்க மறுத்து விட்டார்கள் என்று வேதனையுடன் கூறினார்.. எனவே தன்னை அந்த பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கல்வி அதிகாரியிடம் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து கல்வி அதிகாரிகள் ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டனர். அப்போது ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை பழனியம்மாள் கூறும் போது, எங்கள் பள்ளியில் வரலாற்று பாடத்தில் புவியியல், பொருளியல், கணினி பயன்பாடு ஆகிய பாடங்களே உள்ளன. அந்த மாணவி வரலாற்று பாடத்தில் பொருளியல், வர்த்தகம், கணக்கு பதிவியல் தேர்வு செய்து படித்திருக்கிறார்.. ஆகவே மாணவி படித்த பாடப்பிரிவு இல்லாததால் தான் மாணவியை சேர்க்கவில்லை என்றார்.
இதனால் நொந்து போன மாணவி, வேறு பள்ளியை எப்படி தேடுவது என்று தெரியாமல் தவித்து வருகிறார். ஏழை, எளிய மாணவ-மாணவிகள் அரசு பள்ளி, மாநகராட்சி பள்ளியில் சேர வருகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட பாடப்பிரிவு இல்லை என்பதால் வீட்டின் அருகே உள்ள பள்ளியில் மாணவி சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை எல்லா ஊர்களிலும் இருக்காது என்றாலும், கலை, வணிகம், வொக்கேஷனல் பாடப்பிரிவுகள் எல்லா ஊர்களிலும் ஒரே போல் இல்லை என்பதும் எதார்த்தமான உண்மை. இதை மாணவர்கள் அறிந்து கொண்டால் இதுபோல் சிக்கல் வராது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications