வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கிவிட்டதாக போராடிய கோவை பாஜகவினர் கையில் ஓட்டு போட்ட மை!
கோவை: கோவையில் வாக்காளர் பட்டியிலில் இருந்து தங்களது பெயர்களை நீக்கியதாக பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏற்கனவே வாக்களித்தவர்கள் "நியாயம்" கேட்டு போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கோவையில் 1 லட்சம் வாக்குகள் காணவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். கோவையில் போட்டியிட்ட அண்ணாமலை , "கோவையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்திருந்தாலும், சோகமான விஷயம் என்னவென்றால் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. எந்த அடிப்படையில் நீக்கியுள்ளனர் எனத் தெரியவில்லை, என்று கூறினார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கோவையில் 1 லட்சம் வாக்குகள் காணவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். கோவையில் போட்டியிட்ட அண்ணாமலை , "கோவையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்திருந்தாலும், சோகமான விஷயம் என்னவென்றால் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. எந்த அடிப்படையில் நீக்கியுள்ளனர் எனத் தெரியவில்லை, என்று கூறினார்.
இந்த நிலையில்தான் இன்று கோவையில் பாஜகவினர் மற்றும் பீப்பிள் ஆப் அண்ணாமலை என்ற குழுவை சேர்ந்தவர்கள் போராட்டம் செய்தனர். தங்களுக்கு வாக்களிக்க முடியவில்லை. எங்கள் பெயர் வாக்குப்பதிவு லிஸ்டில் இல்லாத காரணத்தால் வாக்களிக்க முடியவில்லை என்று கூறி போராட்டம் செய்தனர்,

இதற்காக நீதி, நியாயம் கேட்டு வரிசையாக மக்கள் பலர் கூறி அண்ணாமலைக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி போராட்டம் செய்தனர். அண்ணாமலைக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்யும் பீப்பிள் ஆப் அண்ணாமலைதான் இந்த போராட்டத்தை செய்தனர். பாஜகவினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் இவர்கள் வாக்குபதிவின் போது வைக்கப்பட்ட மையுடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
வாக்காளர் பட்டியிலில் இருந்து தங்களது பெயர்களை நீக்கியதாக இந்த குழு சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏற்கனவே வாக்களித்தவர்கள் போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே வாக்களித்துவிட்டு தங்களுக்கு வாக்கு இல்லை என்று இவர்கள் கூறியது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

விளக்கம்: முன்னதாக கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் இது பற்றி அளித்த விளக்கத்தில், கோயம்புத்தூர் மாவட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், அதனால் அவர்களால் வாக்களிக்க இயலவில்லை என ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பான தெளிவாக்கம் பின்வருமாறு: கோயம்புத்தூர் மாவட்டத்தில் 22.01.2024 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலை பொறுத்தவரை அக்டோபர் மாதத்தில் வரைவு வாக்காளர் பட்டியலும், அதன் பின்னர் நடைபெறும் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்கு பின்பு, ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது.
ஒவ்வொருமுறை வாக்காளர் பட்டியல், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வெளியிடப்படும் பொழுதும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களது முன்னிலையிலேயே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் பொழுது, வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களை சேர்த்தல், இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறும். இப்பணியில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, வாக்கு சாவடி அலுவலர்கள் மட்டுமன்றி, அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்கு சாவடி நிலை முகவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி, வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இப்பணியில் அனைத்து நிலைகளிலும், வாக்காளர்கள் தங்களின் ஆட்சேபனையை தெரிவிக்க
வழிவகை உள்ளது.

இது தவிர, வாக்காளர் பட்டியலின் தூய்மையை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் படி தொடர் நடவடிக்கை ஆண்டு தோறும் பேறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளக் கோரி, தேர்தல் ஆணையத்தால், பொதுமக்களுக்கு தொடர் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. எளிய முறையில் வாக்காளர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்ள ஏதுவாக, தேசிய வாக்காளர் சேவை தளம் மூலமாகவும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவும் பிரத்யேக வசதி ஏற்படுத்தபட்டுள்ளது.
Watch | கை விரலில் ‘மை’.. ஓட்டை காணவில்லை என ‘பொய்..’
— Sun News (@sunnewstamil) April 25, 2024
கோவையில் பாஜகவினர் நடத்திய காமெடி போராட்டம்#SunNews | #Coimbatore | #BJP | #Elections2024 pic.twitter.com/EhASEV0Sdc
எனவே, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் படி, உரிய நடைமுறைகளை பின்பற்றியே வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது என்பது இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. வாக்காளர்களுக்கு இதில் ஏதேனும் கூடுதல் விபரங்கள் தேவைப்படின் அவர்கள் சம்பந்தப்பட்ட வாக்கு சாவடி நிலைய அலுவலரையோ, வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தையோ, மாவட்ட தேர்தல் அலுவலகத்தையோ அணுகலாம் 6T60T மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலை தலைவர் .கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்












Click it and Unblock the Notifications