நீட் தேர்வை முன்பு ஆதரித்தேன்.. இப்போ சொல்றேன்.. NTA அமைப்பையே கலைக்க வேண்டும்.. கிருஷ்ணசாமி தடாலடி!
கோவை: ஒரு காலத்தில் நீட் தேர்வை தான் வரவேற்றதாகவும், ஆனால் இன்று நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கோவையில் உள்ள அவரது வீட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 63 பொதுமக்கள் பலியாகினர். இந்த மரண ஓலத்தின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க, அதிமுக 56வது வீதி கீழ் சட்டசபையை ஒத்திவைத்து, விவாதம் நடத்த கோரிக்கை விடுத்தது.

இதில் ஏற்பட்ட அமளி காரணமாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழக சட்டமன்றத்தில் இதுவரை நடக்காத சம்பவம் அல்ல. இதற்கு முன்பு அவையை ஒத்திவைத்து முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் கோரிக்கையை ஏற்று 63 பேர்களின் மரணத்திற்கு காரணம் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராயம் மரணங்கள் போல் இனி தமிழகத்தில் எங்கும் ஏற்படக்கூடாது. இனி வரும் காலத்தில் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஒன்றே தீர்வு.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் தலை தூக்காமல் இருக்க, ஜூலை ஆறாம் தேதி பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெறும். அதில் பூரண மது விலக்கு கோரும் ஒத்த கருத்துடைய கட்சிகள் மற்றும் அமைப்பு தலைவர்கள் பங்கேற்பார்கள்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய கிருஷ்ணசாமி, "கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பல மாநிலங்களில் நீட் தேர்வு மோசடியை கண்டித்து போராட்டம் நடைபெறுகிறது.
நீட் தேர்வை நடத்தும் என்.டி.ஏ அமைப்பு சட்டத்தின் மூலமாக உருவாக்கப்படவில்லை. ஒரு டிரஸ்ட் போலத்தான் இருக்கிறது. வலுவான நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் உருவாக்கப்படவில்லை. எனவே என்.டி.ஏ அமைப்பு முற்றிலுமாக கலைக்கப்பட வேண்டும். லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நீட் தேர்வை நடத்தும் நடைமுறையில் வலுவான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் நம்பிக்கையோடு தேர்வை எழுதுவார்கள்.
ஒரு காலத்தில் நீட் தேர்வை நான் ஆதரித்தேன். அன்றைய காலகட்டத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் போதும் என்ற நிலை இருந்தது. எனவே நேர்மையாக பொதுவான தேர்வு இருந்தால் நல்லது என்று இன்று கருதியதால் நீட் தேர்வு தேவை என்று நினைத்தோம். ஆனால் இன்று நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது.
நல்ல மாணவர்களுக்கு மருத்துவத் துறைக்கு வர வேண்டும் என்ற நோக்கில் ஆதரவு தெரிவித்து இருந்தேன். ஆனால், நீட் தேர்வு பயிற்சி மையங்கள் கட்டுப்பாடில்லாமல் செயல்படுகின்றன. பயிற்சி மையங்களில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளின் புகைப்படங்களை விதிமுறைகளை மீறி பயிற்சி நிறுவனங்கள் விளம்பரமாக வெளியிடுவது சட்டத்திற்கு புறமானது.
தேர்வுகளில அதிக மதிப்பெண் பெறும் மாணவ மாணவிகளின் புகைப்படங்களை பள்ளியில் வெளியிடுவதை நிறுத்த வேண்டும். வணிக ரீதியான வியாபார நோக்கிலான செயல்பாடு இது. பயிற்சி மையங்கள் என்ற பெயரில் பெற்றோர்கள் கோடி கணக்கில் பணம் செலவழிப்பதை தடுக்க அரசு முன் வர வேண்டும்.
பள்ளிகளிலேயே ஒருங்கிணைந்த பாட முறையை கொண்டு வந்தால் போதுமானது. இதற்காக தனியாக பயிற்சி மையங்கள் தேவையில்லை. அரசு பள்ளிகளில் தினமும் ஒரு மணி நேரம் தகுதி தேர்வுக்கு எப்படி தயார் செய்வது என்பது குறித்து பாடத்திட்டத்தை சேர்க்க வேண்டு. பயிற்சி மையங்கள் மூலமாக தேர்வுகளில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இதனை தவிர்க்க அன்றாட பாடத்திட்டத்தில் சேர்த்து அரசு பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நீட் தேர்வுகளை தொடர்ச்சியாக ஆதரித்து பேசி வர்ந்தார். நீட் தேர்வு பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருப்பதாக கூறி வந்தார். நீட் தேர்வுக்கு ஆதரவாக கிருஷ்ணசாமி பேசியது முன்பு பெரும் விவாதங்களை ஏற்படுத்தி இருந்தது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக கூட்டணியில் இணைந்து தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் இன்று நீட் தேர்வில் நடந்துள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, என்.டி.ஏ அமைப்பை கலைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications