கோவையில் ரேபிஸ் நோய் பாதித்த சிறுவன் உயிரிழப்பு.. வெறிநாய் கடித்ததால் நேர்ந்த சோகம்
கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மதிகிஷோர் என்ற 15 வயது சிறுவனை வெறிநாய் கடித்துள்ளது. இதில், மதிகிஷோருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த சிறுவனுக்கு கடந்த ஒன்பதாம் தேதி திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுவனின் பெற்றோர் தங்களது மகனை அங்கு உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவனுக்கு வெறிநாய்க் கடித்ததால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளனர். மேலும், நோய் பாதிப்பு முற்றியதால் நாயின் செயல்பாடுகளை அந்த சிறுவன் செய்யத் தொடங்கியுள்ளான். இதையடுத்து, அந்த சிறுவனை உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவனின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக கடந்த 10 ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வெறிநாய்க்கடி சிகிச்சை வார்டில் சிறுவனை அனுமதித்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். ரேபிஸ் நோய் பாதித்ததால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications