'பில் தானே கேட்டேன், துண்டு சீட்டா கேட்டேன்?".. பாஜக அண்ணாமலையை நறுக்குனு கேட்ட திமுக செந்தில் பாலாஜி
கோயம்புத்தூர்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் தொடர்பான விவாதங்கள் பேசுபொருளானது. இந்நிலையில், அவர் சமீபத்தில் வாட்சின் பில்லை வெளியிட்டார். இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வந்த நிலையில்தான் ரஃபேல் வாட்ச் தொடர்பான விவகாரம் வெளியில் வந்தது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் கையில் கட்டியிருந்த வாட்ச் தொடர்பான கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த அவர், இது ரஃபேல் போர் விமானத்தின் பாகத்திலிருந்து உருவாக்கப்பட்ட வாட்ச் என்றும், உலகம் முழுவதும் மிகக்குறைந்த பதிப்பில்தான் இந்த வாட்ச்கள் வெளிவந்துள்ளன எனவும் கூறினார்.

இதன் பின்னர்தான் இந்த விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியது. அதாவது மிகவும் குறைந்த பதிப்பில் வெளிவந்துள்ள இந்த வாட்ச் லட்சக்கணக்கில் விலை கொண்டது எனவும், ஆடுகளை கொண்டு வேளாண் தொழிலில் ஈடுபட்டுவரும் குடும்ப பின்னணியிலிருந்து வந்த அண்ணாமலைக்கு இந்த வாட்ச் எப்படி கிடைத்தது என்று திமுகவினர் கேள்வியெழுப்பினர். குறிப்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி, இந்த வாட்சின் பில்லை அண்ணாமலை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார். இதன் பின்னர் இருவருக்கும் இடையேயான வார்த்தை மோதல்கள் அதிகரிக்க தொடங்கின.
இந்த வாட்சின் பில்லை வெளியிடும்போது திமுக தலைவர்களின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என்று அண்ணாமலை கூறியிருந்தார். இதனையடுத்து கடந்த 14ம் தேதி அவர் திமுக தலைவர்களின் ஊழல் பட்டியல் என்று கூறி சில தரவுகளை வெளியிட்டார். அதேபோல ரஃபேல் வாட்சின் பில்லையும் பகிர்ந்திருந்தார். இந்த இரண்டு விஷயங்கள் குறித்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. திமுக தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் கொடுத்த சொத்து பட்டியலின் விவரத்தைதான் அண்ணாமலை வெளியிடுகிறார் என்றும், அதேபோல ரஃபேல் வாட்சின் பில் என்று அவர் வெளியிட்ட ரசீது நம்பத்தகுந்ததாக இல்லை என்றும் திமுகவினர் விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "ரஃபேல் கடிகாரம் வாங்கியதற்காக அவர் காட்டியது Bill-ஆ? மளிகை கடை துண்டு சீட்டு மாதிரி இருக்கு" என்று விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, "தூங்குறவங்கள எழுப்பலாம். ஆனால் தூங்குற மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது. உண்மையாகவே மக்கள் பணியாற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மக்களின் தேவைகள், கருத்துக்கள் ஆகியவற்றை அரசுக்கு முன்வைக்கலாம்.
ஆனால் அண்ணாமலை ஒரு கோமாளி. நான் அவரிடம் கேட்டது ஒன்றுதான். ரஃபேல் வாட்ச் பில் மட்டும்தான். துண்டு சீட்டா கேட்டேன்? மளிகை கடைக்கு போனால் பழைய வேஸ்ட் பேப்பரை எடுத்து அதில் கணக்கு எழுதி கொடுப்பார்கள். அதுபோல நான் என்ன துண்டு சீட்டா கேட்டேன்? அது பில்லா சார் அது? பில்லா அது? நாம டிரஸ் எடுத்தா அந்த பில்லை வேண்டுமானாலும் மறந்துவிடுவோம் ஆனால், வாட்ச் போன்றவற்றின் பில்லை நாம் பத்திரப்படுத்தி வைத்திருப்போம். அது கிஃப்டாக கொடுக்கப்பட்டாலும் கூட யார் அதை கொடுத்தார்கள் என்பதை நினைவில் வைத்திருப்போம்.

இப்படி இருக்கையில் நாங்கள் கேள்வி கேட்ட முதல் நாளன்றே இந்த வாட்ச் சேரலாதன் மூலமாக எனக்கு வந்தது என்று சொல்லியிருந்தால் அது ஏற்புடையது. ஆனால் இதற்கான பில்லை உடனடியாக வெளியிடாமல் இந்த வாட்சை வாங்கியது யார் என்பதை தேடி பிடித்து அவரை நண்பராக்கி அவர் மூலமாக வாட்ச் வாங்கியதாக கூறுகிறார். சரி இந்த வாட்சை வாங்கிய தேதியில் ரூ.2 லட்சம் அக்கவுன்ட்டிலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? ஆனால் வாட்ச் வாங்கியதற்காக ரூ.2 லட்சத்திற்கு மேல் பணம் எடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் மீறப்பட்டிருக்கிறது.
மட்டுமல்லாது ரூ.3.5 லட்சத்திற்கு வாங்கி வாட்ச் எப்படி ரூ.2.5 லட்சத்திற்கு கொடுக்க முடியும்? இவ்வளவு குறைந்த விலையில் அரிதான இந்த வாட்சை கொடுப்பார்களா என்ன? ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்யை சொல்லி நாட்டு மக்களை ஏமாற்றுகிறார்" என்று கூறியுள்ளார்.
-
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு












Click it and Unblock the Notifications