அதிகாலையில் கொடூரம்.. தம்பதியை தாக்கி செயின் பறிப்பு.. கோவையில் கொள்ளையர்கள் கைவரிசை
கோயம்புத்தூர்: கோவை அருகே, வீட்டினுள் புகுந்து தம்பதியரை கடுமையாக தாக்கி கொள்ளையர்கள் செயினை பறித்த சம்பவம் தொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Recommended Video
கோவை மாவட்டம், அன்னூரை அடுத்துள்ள ஆயம்மாபுதூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி - ராதாமணி தம்பதியர் வீட்டின் முதல் தளத்தில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் கலைவாணன், மகள் சந்தியா, மருமகன் பிரதீப் உள்ளிட்டோர் அதே வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறைகளில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை சுப்பிரமணியின் வீட்டிற்கு வந்த மூன்று திருடர்கள், மேல் தளத்திற்கு சென்று கலைவாணன்,சந்தியா, பிரதீப் ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வராதபடி, முதல் தளத்தை தாழிட்டு அடைத்தனர். கீழ்தளத்தில் இருந்த சுப்பிரமணி - ராதாமணி தம்பதியினரின் வீட்டின் முன் கதவு தாழிடப்படாமல் இருந்தது. இதனை நோட்டமிட்ட திருடர்கள், வீட்டின் உள்ளே புகுந்து, தம்பதியரை சரமாரியாக தாக்கியதோடு, ராதாமணி அணிந்திருந்த தங்க செயினையும் பறித்தனர்.
பின்னர், எதிரே உள்ள காட்டுப் பகுதிக்கள் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை விடாமல் தம்பதியர் துரத்திச் சென்ற நிலையில், அவர்கள் மீது கல், இரும்பு கம்பிகளை வீசியுள்ளனர். இதனால் அச்சமடைந்த அவர்கள் மீண்டும் வீட்டுக்குள்ளேயே வந்து விட்டனர்.
இந்நிலையில் மேல் மாடியில் வசித்து வந்த கலைவாணன், சந்தியா, பிரதீப் உள்ளிட்டோர் கீழே நடக்கும் சம்பவங்கள் தெரிந்த பின்னர், வெளியே வர முற்பட்டனர். வீட்டைவிட்டு வெளியே முடியாதபடி கதவு தாளிடப்பட்டதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இச்சம்பவம் குறித்த தகவலின்பேரில், மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி,அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா உள்ளிட்டோர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. மேலும், சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே வசிக்கும் பழனிச்சாமி என்பவரின் இருசக்கர வாகனமும் திருடு போய் உள்ளது. இதுகுறித்தும் அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னூர் பகுதியில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications