செலவழிக்க தெரியலையாம்.. சாக்கு பையில் ரூ.2.25 கோடி கட்டிவைத்த கோவை லாட்டரி வியாபாரி.. சிக்கினார்
கோவை: கோவையில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து லாட்டரி வியாபாரி நாகராஜ் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்த சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. மொத்தம் 2.25 கோடி ரொக்கத்தை கைப்பற்றிய போலீசார் நாகராஜை கைது செய்தனர். இந்த பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது தெரியாமல் அவர் சாக்குமூட்டையில் கட்டி வைத்து இருந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் லாட்டரி சீட்டு என்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதிர்ஷ்டத்தை நம்பி பலரும் லாட்டரி சீட்டு வாங்கி பணத்தை இழப்பதால் தான் தடை கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் கூட அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனை நடைமுறையில் உள்ளது.

இதனால் தமிழகத்தை சேர்ந்த பலரும் கேரளா சென்று லாட்டரி வாங்கி பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக கேரள எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை உள்பட அதனை சுற்றிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கேரளா லாட்டரி வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர கேரளா லாட்டரியை பலரும் வாங்கி வந்து தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்கின்றனர்.
இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, பாலாஜி நகரின் சென்னியாண்டவர் கோவில் தெருவில் வசிக்கும் நாகராஜ் ( வயது 42) என்பவர் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
நாகராஜ் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் தனது தாயுடன் வசித்து வருவதோடு, கேரளாவில் உள்ள லாட்டரி கடையில் கேஷியராக பணியாற்றி வருகிறார். இவர் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்தது தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் உள்ள நிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது வீட்டில் அனைத்து இடங்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரது வீட்டில் இருந்த சாக்குப்பையை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. மொத்தம் ரூ.2.25 கோடிக்கு பணம் இருப்பது தெரியவந்தது. ரொக்கப்பணத்தில் ரூ.2 லட்சம் அளவுக்கு 2 ஆயிரம் நோட்டுக்கட்டுகள் இருந்தன. அதேபோல் பழைய ரூபாய் நோட்டுகளும் இருந்தன.
இந்த பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது தெரியாமல் அவர் சாக்குமூட்டையில் கட்டி வைத்து இருந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த பணம் பற்றி அவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதோடு 1,000க்கும் அதிகமான லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications