கையில் மாவுக்கட்டுக்கு என்ன காரணம்? எக்ஸ்ரே எடுக்க அழைத்து செல்லப்பட்ட சவுக்கு சங்கர்!
கோவை: குண்டாஸ் பிரிவில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சவுக்கு சங்கர் இன்று மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டார். சவுக்கு சங்கருக்கு வலது கையில் மீண்டும் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கப்பட்டது.
மருத்துவ பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் கோவை சிறையில் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக முழக்கம் போட்டார். மீண்டும் வலது கையில் மாவு கட்டு போட்டு அழைத்து செல்லப்பட்ட சவுக்கு சங்கருக்கு எக்ஸ்ரே எடுத்து சோதனை செய்யப்பட்டது. இந்த முடிவுகள் கோர்ட் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்.

ஏற்கனவே யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர் வீடுகளில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது குண்டாஸ் பதியப்பட்டு உள்ளது.
சென்னை மாநகர் போலீசார் இது தொடர்பான ஆவணங்களை கோவை போலீசாரிடம் வழங்கினர். சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று காலை முதல் தேனி போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்தனர்.
அவர் வீட்டில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் யு டியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சென்னை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிஎம்டிஏ (CMDA) அதிகாரியின் புகாரின் பேரில். சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சங்கர் (எ) சவுக்கு சங்கர். 1/48, த/பெ.ஆச்சிமுத்து, மதுரவாயல், சென்னை என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு. தற்போது கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மத்திய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப, அவர்கள் சங்கர் (எ) சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான குண்டர் தடுப்புக் காவல் அறிக்கை. கோயம்புத்தூர் சிறையில் உள்ள சங்கர் (எ) சவுக்கு சங்கர் என்பவருக்கு இன்று (12.05.2024) சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் மூலம் சார்வு செய்யப்பட்டது.
அவர் மீது சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் சங்கர் (எ) சவுக்கு சங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள மேற்படி வழக்கு உட்பட 7 வழக்குகளில், 3 வழக்குகள் விசாரணையிலும், 2 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும். மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளது, என்று கூறியுள்ளனர்.
சவுக்கு சங்கர் கோரிக்கை: முன்னதாக இனி யூடியூப்பில் கடுமையான பிரச்சனை ஏற்படுத்துவது போன்ற கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன், யார் மனதையும் புண்படுத்தும் வகையில் இனிமேல் பேச மாட்டேன் என்று சவுக்கு சங்கர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், 10 நபர்கள் இருட்டு அறையில் வைத்து தன்னை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். என்னை மோசமாக அடிக்கின்றனர். விசாரணை என்று அடிக்கிறார்கள். இனி யூடியூப்பில் கடுமையான பிரச்சனை ஏற்படுத்துவது போன்ற கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் என்று சவுக்கு சங்கர் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதற்கு, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறேன். நான் விசாரணை மேற்கொள்ளும் வரை தைரியமாக இருங்கள் என்று சவுக்கு சங்கரிடம் நீதிபதி கூறியதாக சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் விஜயராகவன் பேட்டி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications