எஸ்பிஐ வங்கி கணக்கு இருக்கா? கோவை, நெல்லையிலும் பணம் மிஸ்ஸிங்.. திருநெல்வேலி சைபர் கிரைம் வார்னிங்
கோவை: கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தவாறே உள்ளது.. இதையடுத்து, கிரைம் போலீசார் முக்கிய எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்கள். இது தொடர்பாக பொதுமக்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார்கள்.
சமீப காலமாகவே ஆன்லைனில் மோசடிகள் பெருகி கொண்டே வருகின்றன. இது தொடர்பான எச்சரிக்கைகளை போலீசார் விடுத்தபடியே உள்ளனர்.. எனினும் புதிய புதிய மோசடிகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.

குற்ற செயல்கள்: இப்போது கோவையில் ஒரு நூதன மோசடி நடந்திருக்கிறது.. கோவையை சேர்ந்த ராமசாமி என்பவர், இன்ஸ்டாகிராம் பதிவைப் பார்த்து 'Super drinks stock trading' என்கிற வாட்ஸப் குழுவில் இணைந்திருக்கிறார்.. பிறகு அதில் வந்த லிங்க் மூலம் 'Bain' என்ற ஆப்பை டவுன்லோடு செய்துள்ளார்.
அதில், தன்னுடைய செல்போன் நம்பர், வங்கிக் கணக்கு விபரங்களை பதிவிட்டு, கிட்டத்தட்ட ரூ.9,08,100 முதலீடு செய்துள்ளார்... அதன் மூலம் அவரது ஆப்பில், ரூ.32 லட்சம் பணம் இருப்பதாக காண்பித்துள்ளது.. இதைப்பார்த்தமே மகிழ்ச்சியடைந்த ராமசாமி, அந்த பணத்தை எடுக்க முயன்றார். ஆனால், இன்னும் பணம் கட்டினால்தான், பணத்தை தன்னுடைய கணக்கிலிருந்து எடுக்க வேண்டும் என்று மெசேஜ் வந்ததாம்.
கிரைம் போலீஸ்: இதனால் அதிர்ச்சி அடைந்த ராமசாமி, கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் தரவும், போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், நேரடியாக ஜோத்பூருக்கே சென்றார்கள்.
இறுதியில், சத்ய நாராயண் (30), கிஷன் சௌத்ரி (20), சுனில் சரண் (23), சந்தீப் குமார் (26) ஆகிய 4 பேரை கைது செய்து, 4 செல்போன், 5 சிம் கார்டுகள், 4 பேங்க் பாஸ்புக் உட்பட ரூ.3,59,650 பறிமுதல் செய்தனர். இவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ .3 கோடிகளுக்கு மேல் பரிவர்த்தனை ஆகியிருக்கிறதாம்.
புகார்கள்: இப்படி ஏராளமானோர் தினம் தினம் மோசடிகளில் சிக்கி, இறுதியில் சைபர் க்ரைம் போலீஸில் புகார்களை தந்து கொண்டிருக்கிறார்கள்.. பல்வேறு நேரங்களில் பிரபல வங்கிகளின் பெயர்களை பயன்படுத்தியும் மோசடி நடக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ஐசிஐசிஐ வங்கியின் லோகா மற்றும் பெயரை பயன்படுத்தி மோசடி நடந்தது.. உடனே ஐசிஐசிஐ வங்கி இது சம்பந்தமான எச்சரிக்கையை விடுத்து, பொதுமக்களையும் அலர்ட் செய்திருந்தது.
அதேபோல, எஸ்பிஐ வங்கியின் பெயரை சொல்லி ஏராளமான மோசடிகள் நடந்து வருகிறதாம்... எஸ்.பி.ஐ. வங்கி பெயரில் மோசடிகள் அதிகரித்திருப்பதாக நெல்லை காவல்துறையும் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.
புகார்கள்: அதாவது, தனிப்பட்ட வாட்ஸ்ஆப் குழுக்களில் எஸ்.பி.ஐ. பரிசுப் பொருள் பற்றிய பொய்யான செய்தி பரப்பப்படுகிறதாம்.. கடந்த 3 மாதங்களில் மட்டும், எஸ்பிஐ வங்கி பெயரை பயன்படுத்தி, 73 புகார்கள் தேசிய சைபர் கிரைம் போர்ட்டலுக்கு வந்திருக்கிறதாம்.. எனவே, குற்றங்கள் தொடர்பாக 1930 என்ற எண் அல்லது www.cybercrime.gov.in இல் புகார் அளிக்கலாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications