நைட் 11 மணிக்கு வரேன்! பாயை எடுத்து வை! அதிர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி! பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியர் ஒருவர், 9ஆம் வகுப்பு மாணவியிடம் இரவு 11 மணிக்கு வரேன் பாயை எடுத்து வை என கூறியதை அடுத்து அந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் கண்ணார்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாராயணசாமியின் மகன் அய்யாசாமி. இவருக்கு வயது 39.

நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தின் கீழ் அறிவியல் நடைமுறை வகுப்பு எடுக்க இந்த பள்ளிக்கு அய்யாசாமி வந்தார். அவர் 7ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாடம் எடுத்தார்.
அப்போது அந்த பள்ளியில் படிக்கும் 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர், "சார் எங்கள் கிளாஸுக்கு எப்போ வருவீங்க" என கேட்டுள்ளார். அதற்கு அய்யாசாமி, "இரவு 11 மணி வரேன், பாயை எடுத்து வை" என ஆபாசமாக கூறியதாக தெரிகிறது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, பெரியநாயக்கன்பாளையம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த மாணவிக்கு உதவியாக பள்ளி தலைமை ஆசிரியரும் இருந்தாராம். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சோபியா, ஆசிரியர் அய்யாசாமியிடம் விசாரணை நடத்திய நிலையில் அவர் , அந்த மாணவியிடம் கூறியது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து அய்யாசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்வேறு பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டதை அடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டு புகாரின் உண்மைத் தன்மை கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications