Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் இன்று முதல் ஏற்பட போகும் சிக்கல்.. டிரம்ப் போட்ட வரி.. மொத்த தமிழ்நாடும் அறிய வேண்டியவை

Subscribe to Oneindia Tamil

கோவை: இந்தியாவில் இருந்து செல்லும் பொருட்களுக்கு அமெரிக்காவில் இன்று முதல் 50 சதவீத வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரிவிதிப்பால், ஜவுளி, ஆயத்த ஆடைகள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், இறால், தோல், காலணி, விலங்கு பொருட்கள், ரசாயனங்கள், மின்சார எந்திர சாதனங்கள் ஆகிய துறைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மருந்து பொருட்கள், எரிசக்தி பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள் ஆகியவற்றுக்கு 50 சதவீத வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வர்த்தக மதிப்புப்படி, அமெரிக்காவுக்கு 4 ஆயிரத்து 820 கோடி டாலர் மதிப்புள்ள இந்திய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. எனவே, அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால், 4 ஆயிரத்து 820 கோடி டாலர் மதிப்புள்ள இந்திய பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று மத்திய வர்த்தக அமைச்சகம் புள்ளி விவரம் ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்தியாவை தவிர, பிரேசில் மட்டுமே 50 சதவீத வரியை சந்திக்கிறது. சீனா 30 சதவீத வரியையும், மியான்மர் 40 சதவீத வரியையும் சந்தித்துள்ளன.

Sectors in Coimbatore and Tiruppur that will be severely affected by US tariffs

கோவை திருப்பூருக்கு பாதிப்பு

அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரிவிதிப்பு காரணமாக இந்தியாவில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்கிற நிலையில், கொங்கு மண்டலம் கடுமையான பாதிப்பை சந்திக்க போவதாக தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். கோவையில் இருந்து என்ஜினியரிங், ஜவுளி ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதேபோல் திருப்பூருக்கும் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல்லும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலத்தில் முக்கிய நகரமான கோவை தான் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம். இந்த நகரம் தான், தென்மாவட்டத்தினர் பலருக்கும் வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. சென்னையைவிட கோவையில் தான் சிறுகுறு நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. பல தொழில் முனைவோர்கள். லட்சக்கணக்கான மக்கள் கோவை, திருப்பூரில் குடிபெயர்ந்து வேலை செய்கிறார்கள்.

11 பில்லியன் டாலர் ஏற்றுமதி

பொதுவாக கோவையில் இருந்து அமெரிக்காவிற்கு அதிகளவு நகைகள், என்ஜினீயரிங் பொருட்கள், ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும். இந்திய அளவில் திருப்பூர், கோவையில் இருந்துதான் அதிகமான ஏற்றுமதி இருக்கிறது. இதில் ஜவுளி ஏற்றுமதி மட்டும் ஒரு ஆண்டிற்கு 11 பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி இருக்கிறது.. டிரம்பின் 50 சதவீத வரிவிதிப்பால் இந்த பொருட்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

என்ஜினியரிங் பொருட்கள்

கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், அமெரிக்காவில் பெரிய சுரங்கங்களில் பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்படும் கனரக வாகனங்களுக்கான உதிரிபாகங்கள், என்ஜினியரிங் பொருட்கள் கோவையில் இருந்துதான் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆண்டுக்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் நடக்கிறது. அனைத்து வகையான என்ஜினீயரிங் பொருட்களுக்கும் 50 சதவீத வரி விதிக்கப்படவில்லை. சில என்ஜினீயரிங் பொருட்களுக்கு 25 சதவீத வரி மட்டுமே இருக்கிறது. இந்த வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகளை அமெரிக்க வர்த்தகர்கள், கோவை உற்பத்தியாளர்களுடன் பகிர்ந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்றார்.

தங்க நகை பாதிப்பு

தங்கநகை வியாபாரிகள் இதுபற்றி கூறும் போது, கோவை மாவட்டத்தில் இருந்து தங்கநகை அதிக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.. மொத்த ஏற்றுமதியில் 10 சதவீதம் தங்க நகைகள் அமெரிக்காவுக்கு கோவையில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. கோவையில் உற்பத்தி செய்யப்படும் தங்கநகைகளை அங்குள்ள அமெரிக்கவாழ் இந்திய மக்கள் அதிகம் வாங்குகிறார்கள்.

ஏற்கனவே 1.2 சதவீதம் இறக்குமதி வரியை அமெரிக்கா வசூலித்து வந்தது. தற்போது மேலும் 50 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளதால், மொத்தம் 51.2 சதவீதமாக வரி உயர்ந்துள்ளது. இதனால் தங்க நகை ஏற்றுமதி தொழில் மிகவும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்க நகை தயாரிப்பில் 2 லட்சம் தொழிலாளர்கள் கோவையில் வேலை செய்து வருகிறார்கள். ஏற்றுமதி பாதிக்கப்பட்டால் இவர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றார்.


ஜவுளி ஏற்றுமதி

தென் இந்திய நூற்பாலைகள் சங்க (சைமா) பொதுச்செயலாளர் செல்வராஜ் கூறுகையில், கோவை, திருப்பூரில் இருந்து அமெரிக்காவிற்கு படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட கார்மெண்ட்ஸ் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும். அமெரிக்க சந்தையில் கிட்டதட்ட 40 சதவீதம் அளவிற்கு கோவை, திருப்பூர் கார்மெண்ட்ஸ்கள் தான் உள்ளன. கோவை, திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு 37 பில்லியன் டாலர்களுக்கு ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் இந்திய மதிப்பில் ரூ.1 லட்சம் கோடி அளவிற்கு அமெரிக்காவிற்கு மட்டும் ஜவுளி பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.

தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் வரி விதிப்பால் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல ஜவுளி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் அதிகளவு சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். அமெரிக்காவின் வரி காரணமாக திருப்பூரிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உற்பத்தி நிறுத்தம் பிரச்சனையை சந்திக்க தொடங்கி உள்ளனர். மத்திய அரசு இந்த பிரச்சனையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+