ஒரே ஒரு தோட்டா.. காட்டி விடுவேன் டாட்டா.. சமூக விரோதிகளுக்கு சீமான் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகரிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் தான் ஆட்சிக்கு வந்தால், ஒரே தோட்டா, சமூக விரோதிகளுக்கு காட்டுவேன் டாட்டா என்று சீமான் பன்ச் அடித்திருப்பது வைரலாகி வருகிறது.

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை சூலூர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்துள்ளனர். மக்களிடையே என்ன மாற்றம் வந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் போராட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளதாக கூறுகிறார். இது பெருமையா. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் போராடுகின்றனர். இப்படி பிரச்சனைகளை தந்தவர்கள் திரும்ப திரும்ப ஆட்சிக்கு வருகின்றனர்.

seeman-seeman-says-if-he-comes-to-power-he-will-wipe-out-anti-social-elements-with-a-single-bullet

வலிமையான ஆயுதம்

இது தொடர்வது அடிமைத்தனம். அநீதியை எதிர்க்க முடியாத மக்கள் சகித்து கொள்கின்றனர். இரண்டு வயது குழந்தை முதியவர்கள் பாலியல் வன்கொடுமை செய்கின்றனர். பெயர் பலகைகளில் தமிழ் எழுத்துகள் டங்கிலீசாக உள்ளது. ஓட்டுக்கு காசு கொடுக்கிறார்களா என்று பார்த்து அவர்களுக்கு வாக்களிக்க முடிவு செய்கின்றனர். ஆசிரியர்கள் வீதியில் நிற்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆதரவும், ஆளும் கட்சியாக வந்தால் கண்டுகொள்வதில்லை.

தவறான ஆட்சியாளர்கள் தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பு. அரசே சாராயத்தை விற்கிறது. காசை பரித்து ஆட்சி நடக்கிறது. சட்டம் ஒழுங்கு வன்முறை அதிகரித்துள்ளது. இந்த தேர்தலில் மாற்றத்திற்கான களமாக மாற்றுங்கள். தேர்தல் வலிமை மிக்க ஆயுதம். மக்கள் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். காசு வாங்கினால் மாண்பு செத்து போகும். மனிதம், மானுடம் தேவை என்றால் நாம் தமிழருக்கு வாக்களிக்க வேழ்ண்டும்.

எங்கள் கொள்கைகள் காப்பி

இந்த பூமியை காப்பாற்ற நாம் தமிழர் மட்டும் உண்டு. அனைத்தையும் நேசிக்கும் அரசியல் இயக்கம் நாம் தமிழர் மட்டுமே. உயிர்மை நேயம் அந்த இனத்தின் பிள்ளைகள் நாங்கள். வன்புணர்வு குற்றத்திற்கு மரண தண்டனை எங்கள் கொள்கை. தொட்டால் தோட்டா பாயும். ஒரே தோட்டா. சமூக விரோதிகளுக்கு டாட்டா. 5 வருடங்களில் எத்தனை கொலைகள் நடந்துள்ளன. எங்கள் கொள்ளைகளை காப்பியடிக்கின்றனர்.

அனைத்தையும் நேசிப்பவர்களின் கையில் நாடு இருக்க வேண்டும். பிரபாகரன் கனவை தந்தான் தமிழன் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைத்தால் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். திராவிட கட்சிகளிடையே அதாவது 2000 மற்றும் 2500 க்கு இடையே தான் போட்டி. நானும் ஓட்டுக்கு ஹெலிக்காப்டர், 1 கிலோ தங்கம் தருகிறேன். நாங்கள் அறப்போரை செய்ய வந்துள்ளோம். தண்ணீரை விற்கிறார்கள். பெருந்துறையில் 26 கி.மீ சுற்றுவட்டாரத்தில் நீர் மாசாகியுள்ளது. கொஞ்ச நாளில் தண்ணீருக்கு போராட்டம் வெடிக்கும்.

பாட்டு பாடி

எங்களுக்கு சின்ன மூளை தான். ஆனால் பெரிய கனவு உள்ளது. நான் வாக்கு கேட்டு நிற்கவில்லை. நம் வாழ்க்கையை கேட்டு நிற்கிறேன். வாக்கு பறிக்க இலவசம் கொடுக்கிறார்கள். சூயஸ் பற்றிய விழிப்புணர்வு தேவை" என்றார். தொண்டர்கள் சீமானை பாட்டு பாட சொல்லி கேட்டனர். தொடர் வற்புறுத்தலால் அவர் பாட்டு பாடி பிரச்சாரம் செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+