ஆபரேஷன் "50000".. சத்தமே இன்றி அதிமுக கோட்டையை அசைத்த செந்தில் பாலாஜி.. அந்த "எல்இடி"தான் ஹைலைட்டே!
கோயம்புத்தூர்: முதல்வர் ஸ்டாலினின் கோவை பயணம் அதிக அளவில் கவனம் பெற்று வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு 3 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் சென்று இருக்கிறார்.
இந்த பயணத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த முறையும் முக்கியமான ஏற்பாடுகளை செய்துள்ளார். முக்கியமாக ஏற்கனவே உட்கட்சி பிரச்சனையில் சிக்கி தவித்து வரும் அதிமுகவிற்கு மேலும் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்றையும் செய்துள்ளார்.
நேற்று இரவு சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் கோவையில் கட்சி நிர்வாகிகளுடன் சில நிமிடங்கள் விருந்தினர் மாளிகையில் உரையாற்றினார். அதன்பின் இன்று காலை நடந்த நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ரூ. 663 கோடி மதிப்பளவில் 748 புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 271.25 கோடி மதிப்பளவில் 228 முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தார். 1,07,062 பயனாளிகளுக்கு ரூ. 588 கோடி மதிப்பில் நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கப்படுகிறது.

அதிமுக
இந்த நிலையில் இன்று திமுகவில் மாற்று கட்சியினர் இணையும் விழா நடைபெற உள்ளது. பொள்ளாச்சியில் உள்ள ஆச்சிபட்டியில் இந்த விழா நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் கோவை வந்த போதும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பும் மாற்று கட்சியினர் பலர் திமுகவில் இணைந்தனர். இதற்கு மாஸ்டர் மைண்டாக இருந்தவர் செந்தில் பாலாஜி. அவரின் முன்னெடுப்பில் நிர்வாகிகள் பலர் திமுகவில் ஐக்கியம் ஆனார்கள்.

திமுக
அதேபோல் இந்த முறையும் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழாவிற்கு செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்துள்ளார். மொத்தம் 50000 நிர்வாகிகள் வேறு கட்சியில் இருந்து திமுகவில் இணைய உள்ளனர். இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள். அதிமுகவை சேர்ந்த ஆறுக்குட்டி, தேமுதிகவை சேர்ந்த தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய போவதாக கூறப்படுகிறது.

அதிமுக அதிர்ச்சி
அதிமுகவின் கோட்டையாக விளங்கியது கொங்கு மண்டலம். ஆனால் செந்தில் பாலாஜி வருகைக்கு பின் கொங்கு மண்டலத்தில் திமுக வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கொங்கு மண்டலத்தில் திமுகதான் மாபெரும் வெற்றிபெற்றது. இதற்கு செந்தில் பாலாஜியின் பணிகள் முக்கிய காரணமாக இருந்தன. அதேபோல்தான் இந்த முறையும் அதிமுகவின் கோட்டையை அசைத்து பார்க்கும் வகையில் மாற்று கட்சியினர் பலர் கூண்டாக திமுகவில் இணைய உள்ளனர்.

எல்இடி
இதற்காக பொள்ளாச்சியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளை நேற்று செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டார். பல இடங்களில் ஸ்டாலின் படங்கள் உயரமாக வைக்கப்பட்டு இருந்தது. சில இடங்களில் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரின் எல்இடி இருந்தது. அதோடு புதிதாக உதயநிதி ஸ்டாலின் எல்இடி விளக்குகளும் இணைக்கப்பட்டு இருந்தது. வழி நெடுக வாழை மரங்கள் வைக்கப்பட்டு இந்த விழாவிற்காக பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications