மேடையில் இருக்க முடியாது.. கோபப்பட்ட செந்தில் பாலாஜி.. பதறிப்போன கோவை திமுக நிர்வாகிகள்!
கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் திமுக நிர்வாகிகளை எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. கோவையில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறவேண்டும் என்று கூறிய செந்தில் பாலாஜி, மேடையில் உள்ள நிர்வாகிகள் சரியாகப் பணியாற்றவில்லை என்றால் கீழே அமர வேண்டி இருக்கும் என எச்சரித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கோவை மாவட்டத்தில் திமுகவின் பலத்தை நிரூபிக்க செந்தில் பாலாஜி தீவிரம் காட்டி வருகிறார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக அதிக இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தாலும் கொங்கு மண்டலத்தில் சறுக்கியது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது திமுக. சட்டசபை தேர்தலுக்குப் பிறகு கோவையில் திமுகவை வலிமையாக நிலைநிறுத்த ஸ்டாலின் தீவிரம் காட்டினார்.

செந்தில் பாலாஜி
திமுகவின் கொங்கு மண்டல பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டார். அதன் பிறகு உள்ளாட்சி தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் திமுக வெற்றிக்கொடி நாட்டியது. உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தலுக்கும் சட்டசபை தேர்தலுக்கும் வித்தியாசம் உண்டு. சட்டசபை தேர்தலில் வென்று, கோவை திமுகவின் கோட்டை என நிரூபிக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிப் பணியாற்றி வருகிறார் செந்தில் பாலாஜி.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் திமுக கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தொண்டாமுத்தூர் தொகுதிக்கான திமுக தேர்தல் அலுவலகம் குனியமுத்தூர் பகுதியில் நேற்று திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திமுக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
10 தொகுதிகளிலும்
இந்த நிகழ்ச்சியில் பேசிய செந்தில் பாலாஜி, "2026 சட்டசபை தேர்தலுக்காக நமக்கு வாக்களிக்காதவர்களிடமும் அரசின் திட்டங்களை எடுத்துச் சொல்லி அவர்களை நம் வாக்காளர்களாக மாற்ற வேண்டும். அப்படி செய்தால் தொண்டாமுத்தூர் தொகுதியில் உதயசூரியன் வெல்லும். 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவையில் ஒரு தொகுதியில் கூட நாம் வெல்லவில்லை.
ஆனாலும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த 5 ஆண்டுகளில் அதிகமாக வந்ததும், அதிக திட்டங்களைக் கொடுத்ததும் கோவை மாவட்டத்துக்குத்தான். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் வென்று கொடுப்பதுதான் முதலமைச்சருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன். முக்கியமாக தொண்டாமுத்தூரில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்ற சரித்திர சாதனையை உருவாக்க வேண்டும்.
நிர்வாகிகளுக்கு வார்னிங்
மேடையில் உள்ள நிர்வாகிகள் சரியாகப் பணியாற்றவில்லை என்றால் கீழே அமர வேண்டி இருக்கும். அதேபோல கீழே இருப்பவர்கள் நன்றாகப் பணியாற்றினால் அவர்கள் மேடைக்கு வரலாம். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் கட்சிக்காக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று எச்சரிக்கிறேன்" எனப் பேசியுள்ளார். செந்தில் பாலாஜி, எச்சரிக்கும் தொனியில் கட்சி நிர்வாகிகளிடம் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications