கோவை மக்களை இழிவு செய்தாரா தயாநிதி மாறன்.. வெட்டி ஒட்டிப் போட்டு வீடியோ.. செந்தில் பாலாஜி பொளீர்
கோவை: கோவை மாவட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் திமுக எம்பி தயாநிதிமாறன் பேசிவிட்டதாக பாஜக அண்ணாமலை சார்பாக வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு திமுக செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
கரூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற திமுக-வின் ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் நிகழ்ச்சியில் திமுக தயாநிதிமாறன் எம்பி பேசியது விவாதங்களை ஏற்படுத்தியது. அவர் தனது பேச்சில்.. கோவை மக்கள் போட்டி மனப்பான்மை கொண்டவர்கள். அவர்கள் போட்டி போட்டு வளர்வார்கள். அவர்கள் பொருளாதாரத்தில் வளர்ந்துவிட்டார்கள்..

அண்ணாமலை விமர்சனம்
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தயாநிதி மாறன் தவறாக பேசிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தயாநிதி மாறன் மீது பாஜக அண்ணாமலை விமர்சனங்களை வைத்து இருந்தார். அதில், திமுக கூட்டத்தில், கோவை மக்கள், பக்கத்து ஊரைக் கெடுப்பவர்கள் என்று அவமரியாதையாகப் பேசுகிறார் திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன். அதைக் கேட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார் முன்னாள் சாராய அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி.
கோயம்புத்தூர் மக்கள், பண்பானவர்கள். மரியாதை மிக்கவர்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களையும் போல, கோயம்புத்தூர் மக்களும், தங்கள் கடின உழைப்பால், தமிழகத்துக்கும், நாட்டிற்கும் தங்கள் பொருளாதார பங்களிப்பை அளித்து வருகின்றனர். திமுகவினர் தவிர மற்ற தமிழக மக்கள் யாருமே, தமிழகத்தைச் சுரண்டிக் கொழுக்க நினைப்பதில்லை.
திமுக கூட்டத்தில், கோவை மக்கள், பக்கத்து ஊரைக் கெடுப்பவர்கள் என்று அவமரியாதையாகப் பேசுகிறார் திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன். அதைக் கேட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார் முன்னாள் சாராய அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி.
— K.Annamalai (@annamalai_k) February 17, 2026
கோயம்புத்தூர் மக்கள், பண்பானவர்கள். மரியாதை… pic.twitter.com/tUXaFe0Idb
கோபாலபுரக் குடும்பத்தை அண்டிப் பிழைக்கும் தயாநிதி மாறனுக்கே இத்தனை ஆணவம் இருந்தால், தங்கள் கடும் உழைப்பினால் தமிழகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கோயம்புத்தூர் மக்களுக்கு எவ்வளவு சுயமரியாதை இருக்கும். தனது திமிர்த்தனமான பேச்சுக்கு, தயாநிதி மாறன் உடனடியாக கோயம்புத்தூர் மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்.
திமுகவினரின் இந்த ஆணவத்தால்தான், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதி மக்களும், திமுகவைப் புறக்கணித்து வருகிறார்கள். வரும் தேர்தலில், தமிழகம் முழுவதுமே திமுகவுக்கு அதே நிலைதான் ஏற்படும். அவங்க ஊரைக் கெடுக்கமாட்டாங்க. பக்கத்து ஊரை எல்லாத்தையும். மாசு என்ற பெயரில். இது தேர்தல் டைம்.. மாத்தி புரிஞ்சிக்க போறாங்க.. நான் தப்பா சொல்ல என்று கூறி இருந்தார், என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தயாநிதி மாறன் அவர்கள் நகைச்சுவையாகப் பேசிய காணொளியை, வெட்டி ஒட்டிப் போட்டு அரசியல் செய்யும் அட்டக்கத்தி, பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்து, ஒன்றிய அரசிடம் கோவைக்கு பெற்றுத் தந்த திட்டங்கள் என்ன?
— V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@V_Senthilbalaji) February 17, 2026
கோவை மெட்ரோ திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசிடம்…
செந்தில் பாலாஜி விளக்கம்
கோவை மாவட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் திமுக எம்பி தயாநிதிமாறன் பேசிவிட்டதாக பாஜக அண்ணாமலை சார்பாக வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு திமுக செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
அதில், அவர்கள் நகைச்சுவையாகப் பேசிய காணொளியை, வெட்டி ஒட்டிப் போட்டு அரசியல் செய்யும் அட்டக்கத்தி, பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்து, ஒன்றிய அரசிடம் கோவைக்கு பெற்றுத் தந்த திட்டங்கள் என்ன?
கோவை மெட்ரோ திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசிடம் பெற்றுத் தர எடுத்த முயற்சிகள் என்ன?
கோவை மாவட்ட தொழில் முனைவோர்களை வதைக்கும் ஜி.எஸ்.டி பிரச்சனையில் பங்களிப்பு என்ன?
இறக்குமதி வரிகளால் பாதிக்கப்பட்ட கரூர், திருப்பூர் மற்றும் கோவை ஏற்றுமதியாளர்களுக்கு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல், வெறும் வாயில் வடை சுடுவதையும் வெற்று காற்றில் சாட்டை சுழற்றியதையும் கோவை மக்கள் தெரிந்து கொண்டதால் தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வ வைத்தார்கள்.., என்று கூறி உள்ளார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications