கோவையின் அஸ்திவாரத்திலேயே கை வைத்த செந்தில் பாலாஜி.. மொத்தமாக மாறும் களம்
கோவை: தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் நடைபெறுகிறுகிறது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவை தேர்தல் களம் மாநில அளவில் கவனம் ஈர்த்துள்ளது. கோவையில் திமுகவை வெற்றி பெற வைப்பதற்காக செந்தில் பாலாஜி களமிறங்கியுள்ளார். கோவையின் முக்கிய பிரச்சனைகளை செந்தில் பாலாஜி கையில் எடுத்து செய்துள்ள ஸ்மார்ட் மூவ் அங்கு திமுகவை முன்னே நகர்த்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக கூட்டணியும் முயற்சி செய்து வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியும் களத்தில் வேகம் காட்டுகிறார்கள். தவெக மட்டும் தான் களத்தில் மந்தமாக உள்ளது. திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்கிற டார்கெட்டுடன் பணியாற்றி வருகிறது.

செந்தில் பாலாஜி மாஸ்டர் பிளான்
இதற்காக திமுகவுக்கு பெரியளவுக்கு கைக்கொடுக்காத கொங்கு மண்டலத்தில் கூட அதிக கவனம் செலத்துகிறது. கோவையில் தங்களின் வெற்றியை உறுதிபடுத்துவதற்காக கரூரில் இருந்து செந்தில் பாலாஜியை திமுக தலைமை இறக்கியுள்ளனர். கோவை தெற்கு தொகுதியை கோவையின் இதய பகுதி என்றழைப்பார்கள். அங்கு வெற்றி பெற்றால் கோவை முழுவதும் திமுக வெற்றி பெறும் என்று கணக்கு போடுகிறார்கள்.
செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடந்தே சென்று பிரச்சாரம் செய்கிறார். ஒவ்வொரு நாளும் கோவையில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார். கோவை என்றாலே தொழில் நகரம். தென்னிந்தியாவின் மான்செஸ்டர், சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் இதயம் என்றழைப்பார்கள்.
தொழில் அமைப்புகளுடன் சந்திப்பு
இதனால் தொழில்துறையினரிடம் செந்தில் பாலாஜி அதிக கவனம் செலுத்தி வருகிறார். கோவை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்டதொழில் அமைப்புகள் உள்ளன. அவர்கள் அனைவரையும் செந்தில் பாலாஜி நேரடியாக சந்தித்து பேசி வருகிறார். ஒவ்வொரு அமைப்புகளிடமும் கோரிக்கைகள் வாங்கி ஆலோசித்து வருகிறார்.
தொழில்துறையினரிடம் செந்தில் பாலாஜி பேசுகையில், "நான் உங்களுக்கு புதிய நபர் இல்லை. கடந்த 2 வருடங்களாக கோவையில் தான் பயணித்து வருகிறேன். எனக்கு இங்கு வாய்ப்பு கொடுத்தால் நான் தொழில்துறையின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்துவேன். கோவை உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த முயற்சி செய்வேன்.
வளர்ச்சியில் உறுதி
கடந்தமுறை இங்கு திமுக வெற்றி பெறாமலேயே கோவைக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளோம். இங்கு எங்களை வெற்றி பெற வைத்தால் நாம் உரிமையுடன் திட்டங்களை கேட்டு வாங்கலாம். தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தியில் 15 சதவீதம் கோவையில் தான் இருக்கிறது. நான் அதை 25 சதவீதமாக உயர்த்தும் இலக்குடன் முழுவீச்சில் பணியாற்றுவேன்" என்றார். இது கோவை தொழில்துறையினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications