கோவையில் 16 வயது சிறுமியை சீரழித்த கும்பல்.. 7 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பு!
கோவை : கடந்த 2019 ஆம் ஆண்டு கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், 7 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை வடவள்ளி சீரநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூங்காவில், 16 வயது சிறுமி ஒருவர் தனது உறவினருடன் பிறந்தநாள் கொண்டாடச் சென்றார். இரவு 9 மணியளவில் அவர்கள் வீடு திரும்பத் தயாராகும்போது, 7 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது.

அந்தச் சிறுமியின் உறவினரை தாக்கி, 16 வயது சிறுமியை அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. பின்னர் மணிகண்டன் (30) கார்த்திக் (25), ஆட்டோ மணிகண்டன் (30), பிரகாஷ் (22), நாராயண மூர்த்தி (30), கார்த்திகேயன் (28), ராகுல் (21) ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, போக்சோ சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில், மணிகண்டன் (30) கார்த்திக் (25), ஆட்டோ மணிகண்டன் (30), பிரகாஷ் (22), நாராயண மூர்த்தி (30), கார்த்திகேயன் (28), ராகுல் (21) ஆகிய 7 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications