4அடி நல்ல பாம்பையும் விட்டு வைக்காத கோவை குளிர்.. ஹெல்மெட்டுக்குள் புஸ் புஸ் சத்தம்.. இளைஞருக்கு ஷாக்
கோவை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் மழை, மாலை, இரவு வேளைகளில் கடும் குளிர் என ஊரே சில்லென்று நிலவி வருகிறது. இதனால், பாம்புகள் இதமான இடங்களைத் தேடி தஞ்சமடைந்து வருகின்றன. இந்நிலையில், கோவை கொடிசியா அருகே உள்ள லூலு மால் வேர்ஹவுஸில் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் வாகனத்தில் மாட்டி வைத்திருந்த ஹெல்மெட்டுக்குள் குளிருக்கு இதமாக 4 அடி நல்ல பாம்பு புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மழைக்காலம் தொடங்கிவிட்டாலே பூச்சிகள், பாம்புகள் படையெடுக்கத் தொடங்கிவிடும். மழைக் காலங்களில் தண்ணீர் தேங்குவதால் பொந்துகள், புதர்களில் இருந்து வெளிவரும் பாம்புகள் வீடுகளுக்குள், வாகனங்களுக்குள் புகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

குளிருக்கு கதகதப்பாக வைக்கும் வகையில் இடங்களைத் தேர்வு செய்து பாம்புகள் புகுந்துவிடுகின்றன. பொதுவாக மழைக்காலங்களில் பூச்சியினங்கள், தவளைகள், தேள் போன்றவற்றின் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். அவற்றை பிடிப்பதற்காக இரை தேடி வரும் பாம்புகள் தவறுதலாக வீடுகளுக்குள்ளும் புகுந்து விடுகின்றன.
இந்நிலையில், கோவை கொடிசியா அருகே உள்ள லூலு மால் வேர்ஹவுஸில் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் வாகனத்தில் மாட்டி வைத்திருந்த ஹெல்மெட்டுக்குள் குளிருக்கு இதமாக 4 அடி நல்ல பாம்பு புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், கொடிசியா அருகே உள்ள லூலுமால் வேர்ஹவுஸிஸ் பார்க்கிஸ் உள்ளது. அந்த பார்க்கிங்கில் புல்லட் வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்தில் ஹெல்மெட் தொங்க விடப்பட்டிருந்துள்ளது. அவ்வழியாக வந்த 4 அடி நல்ல பாம்பு குளிருக்கு இதமாக உடலை கதகதப்பாக வைத்துக் கொள்வதற்காக அந்த ஹெல்மெட்டுக்குள் புகுந்துள்ளது.
இந்நிலையில், இருசக்கர வாகன உரிமையாளர் சங்கர் வண்டியை எடுப்பதற்காக பார்க்கிங் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, ஹெல்மெட்டை எடுக்க முயன்றபோது அதற்குள்ளே பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, உடனடியாக பாம்பு பிடிக்கும் வீரருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து உடனடியாக வந்த பாம்புபிடி வீரர் 4 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பைப் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டத்தில் காலை, மாலை வேளைகளில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், கதகதப்பான இடங்களைத் தேடி பாம்புகள் வெளியே வருகின்றன. எனவே, ஷூ, ஹெல்மெட், வெளியில் வைக்கப்பட்டுள்ள பொருள்களை எடுக்கும்போது மிகுந்த கவனமாகக் கையாள வேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications