கோவை தனியார் கல்லூரியில் பட்டப்பகலில் பயங்கரம்! மாணவிக்கு கத்திக்குத்து! சக மாணவன் வெறிச்செயல்!
கோவை: கோவையில் தனியார் கல்லூரியில் தன்னை காதலிக்க மறுத்த மாணவியை சக மாணவர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அந்த மாணவிக்கு கை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிக்ச்சை பெற்று வருகிறார்.
கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் துடியலூர் சாலையில் இயங்கி வருகிறது தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இந்த கல்லூரியில் 18 வயது மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

அவருடன் ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த மாணவர் ஹர்ஷவர்தன். இவர் அந்த மாணவியை 3 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவரது காதலை அந்த மாணவி ஏற்கவில்லையாம்.
தன்னை காதலிக்குமாறு அந்த மாணவியிடம் ஹர்ஷவர்தன் பலமுறை கேட்டு அவர் மறுத்துவிட்டாராம். இந்த நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த அந்த மாணவியை ஹர்ஷவர்தன் தடுத்து நிறுத்தினாராம்.
அப்போது தன்னை காதலிக்குமாறு மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போதும் அந்த மாணவி மறுத்துவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த ஹர்ஷவர்தன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை குத்தினார்.
இதனால் மாணவிக்கு கழுத்து, கைகளில் வெட்டுக் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்த மாணவர்களும் பேராசிரியர்களும் ஓடி வந்ததை கண்ட ஹர்ஷவர்தன், அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம்.
இதையடுத்து மாணவியை மீட்டு அந்த கல்லூரி குழுமத்திற்கு சொந்தமான மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த மாணவனை தேடி வருகிறார்கள்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications