நந்தினி - நிரஞ்சனா நினைவிருக்கா? ஆர்எஸ்எஸ்ஐ எதிர்த்து போராடி கைதாகி 52 நாளுக்கு பின் ஜாமீனில் ரிலீஸ்
கோவை: ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடத்தியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் சகோதரிகள் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோர் 52 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார்கள்.
ஊட்டியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தை கண்டித்து வழக்கறிஞர் நந்தினியும் அவரது சகோதரி நிரஞ்சனாவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஒரு மாதம் கடந்தும் இருவரும் விடுவிக்கப்படாத நிலையில் நந்தினியின் தந்தை ஆனந்தனும் கணவர் குணாவும் பேஸ்புக்கில் ஒருவர் பதிவை வெளியிட்டனர். அதில், "ஊட்டியில் ஒரு வாரம் ஆர்.எஸ்.எஸ். சதி ஆலோசனை கூட்டம் நடத்த அனுமதி கொடுத்தது.
ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு உட்பட அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கியது. ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தை எதிர்த்து அறவழி போராட்டம் நடத்திய நந்தினி - நிரஞ்சனாவை அராஜகமாக கைது செய்தது. பொய் வழக்கில் 48 நாட்களாக கோவை மத்திய சிறையில் அடைத்து வைத்திருப்பது. நந்தினி - நிரஞ்சனாவை சிறையில் சந்திக்க கூட அனுமதி மறுப்பது.
போன் மூலம் தொடர்பு கொண்டு குடும்பத்தினருடன் பேசுவதை தடை செய்திருப்பது என தொடர்ந்து திமுக அரசு செயல்பட்டது. திமுக அரசு தனது தவறை திருத்திக் கொண்டு நந்தினி - நிரஞ்சனா இருவர் மீதும் போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்து நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என இவ்வளவு நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
அதற்காகவே பிணை கோராமல் 48, நாட்கள் பொறுமையாக காத்திருந்தோம். ஆனால் திமுக அரசு மாறுவதற்கு துளியும் தயாராக இல்லை. எனவே இனியும் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதாலும் அடுத்தடுத்து செய்ய வேண்டிய களப்பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் நந்தினி - நிரஞ்சனா இருவருக்கும் பிணை கோரி நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளோம்." என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் இருவரையும் ஜாமினில் விடுவிக்கக்கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த சூலூர் நீதிமன்றம் ஜாமினில் விடுத்து உள்ளது. இதனை அடுத்து இருவரும் இன்று சிறையில் இருந்து வெளியே வந்தனர். இது குறித்து நந்தினியின் பேஸ்புக்கில் ஆனந்தனும் குணாவும் பதிவிட்டு உள்ளார்கள்.
அதில், "நந்தினி - நிரஞ்சனா விடுதலை. 52 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு கோவை மத்திய சிறையில் இருந்து பிணையில் விடுதலை. தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை உருவாக்க தொடர்ந்து சதி செய்து வரும் ஆர்.எஸ்.எஸ். பாசிச கும்பல் ஊட்டியில் ரகசிய சதி கூட்டம் நடத்தியதை எதிர்த்து போராடிய நந்தினி - நிரஞ்சனா இருவரையும் திமுக அரசின் காவல்துறை கடந்த 13.07.23 அன்று பொய் வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்து வைத்திருந்தது.
பொய் வழக்கை ரத்து செய்து சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் எனக்கோரி பிணை கோராமல் சிறையில் இருந்தனர். ஆனால் 50 நாட்களுக்கு மேலாகியும் திமுக அரசு இக்கோரிக்கைக்கு செவி சாய்க்காத நிலையில் பிணை கோரி சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம்.
இம்மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நந்தினி - நிரஞ்சனா இருவருக்கும் பிணை வழங்கி நேற்று (01.09.23) உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இன்று 02.09.23) நந்தினி - நிரஞ்சனா இருவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். நந்தினி - நிரஞ்சனா இருவரின் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications