கோவையில் வாகன கடன்.. இளம் பெண்ணிடம் பைனான்ஸ் ஊழியர்கள் செயலால் ஆடிப்போன குடும்பம்
கோவை: கோவை வடவள்ளி அருகே கஸ்தூரிநாயக்கன் பாளையைத்தில் விஜய் நிகாரிகா தம்பதி வசித்து வருகிறார்கள். இதில் நிகாரிகாவின் தங்கை வர்ஷாவும் அவர்களுடன் வசித்து வருகிறார்கள். வர்ஷா பெயரில் உள்ள வண்டியின் ஆர்சிபுக்கை வைத்து கடன் வாங்கியிருக்கிறார்கள் விஜய் நிகாரிகா தம்பதி. ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வீடு புகுந்து இளம்பெண்ணை 6 பேர் மீது கடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் 6 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடன் வாங்கியர்களிடம் சிலர் கடனை திரும்ப செலுத்த தவறுகிறார்கள். பல்வேறு காரணங்களால் அவர்கள் பணத்தை புரட்டி கடனை செலுத்த முடியாத நிலையில் சிக்கி கொள்கிறார்கள். அப்படியான சூழலில் கடன் கொடுத்தவர்கள், வீடு தேடி வந்து பிரச்சனை செய்வதை பார்த்திருப்பீர்கள்.. அப்படியான ஒரு சம்பவம் தான் கோவை வடவள்ளி பகுதியில் நடந்துள்ளது.

கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன் பாளையைத்தில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி நிகாரிகாவுக்கு 26 வயது ஆகிறது. இவருடைய தங்கை வர்ஷாவுக்கு 24 வயது ஆகறிது. நிகாரிகாவின் தங்கை வர்ஷா மற்றும் குடும்பத்தினரும் விஜய் வீட்டில்தான் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் விஜய், தனது மனைவியின் தங்கை வர்ஷாவின் ஸ்கூட்டரின் ஆர்.சி. புத்தகத்தை வைத்து நிதி நிறுவனம் ஒன்றில் பணம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.. அதற்கான மாதத்தவணையை விஜய் நிதி நிறுவனத்திற்கு சரியாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பணம் கொடுத்த நிதி நிறுவனத்தினர் பலமுறை விஜயின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு கேட்டார்களாம். அப்படி பலமுறை கேட்ட போதிலும் அவர் பணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி, பிரவீன்குமார், ஹரிபிரகாஷ் உள்பட 6 பேர் சம்பவத்தன்று இரவு விஜய் வீட்டுக்கு சென்றனர். அங்கு சென்று கதவை தட்டினார்களாம். அப்போது நிகாரிகா கதவை திறந்து உள்ளார். அவரை கீழே தள்ளிவிட்டு அந்த 6 பேரும் அத்துமீறி உள்ளே நுழைந்தார்களாம்
இதனால் அதிர்ச்சி அடைந்த நிகாரிகா கூச்சலிட்டுள்ளார். உடனே அவர்கள் உன் கணவர் விஜய் எங்கே என்று கூறியபடி வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் சென்று தேடி பார்த்துள்ளனர். பின்னர் அவர்கள் வர்ஷா பெயரில் கடன் வாங்கவிட்டு அந்த தொகையை செலுத்தாமல் விஜய் ஏமாற்றுவதாக கூறி தகாத வார்த்தைகளை பேசி திட்டினார்களாம்.
ஒரு கட்டத்தில் வர்ஷா பெயரில் தான் கடன் வாங்கினார் என்று கோபம் அடைந்த அந்த 6 பேரும், திடீரென்று வீட்டில் இருந்த வர்ஷாவை பிடித்து இழுத்தபடி சென்று காரில் கடத்த முயற்சி செய்தார்களாம். இதையடுத்து அவர்கள் கூச்சல்போடவே, அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அதை பார்த்த அந்த கும்பல் வர்ஷாவை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்களாம்.
இது குறித்து நிகாரிகா கோவை வடவள்ளி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வடவள்ளி பகுதியில் உள்ள லிங்கனூர் கருப்பராயன் கோவில் பூசாரி பிரவீன்குமார், சிவன்கோவில் பூசாரி ஹரிபிரசாத், கிருஷ்ணவேணி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நடந்த சம்பம் பற்றி அறிந்த விஜய் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரவீன்குமாரை தாக்கியதாக புகார் எழுந்தது. அது குறித்த புகாரின்பேரில் விஜய் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications