கேம் ஓவர்.. கோட்டை விட்ட எஸ்.பி.வேலுமணி.. கோவையில் ஆட்டத்தை மாற்றிய செந்தில் பாலாஜி
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23 ஆம் தேதி நடைபெற்றது. எஸ்ஐஆர் நடவடிக்கையால் வரலாறு காணாத வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. கொங்கு மண்டலத்தில் தான் அதிகளவு வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கொங்கு மண்டலத்தில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறது. கோவையில் எஸ்.பி.வேலுமணி கோட்டை விட்ட ஒரு இடத்தில், செந்தில் பாலாஜி பக்காவாக ஸ்கோர் செய்து ஆட்டத்தையே மாற்றியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் கோவை தேர்தல் களம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி இடையே அதிகார போட்டி உச்சத்தில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோவை தேர்தல் களம் திமுகவுக்கு தோல்வியை தான் கொடுத்துள்ளது. கோவையில் தொடர்ந்து அதிமுக தான் வெற்றி பெற்று வருகிறது.

கோவை செந்தில் பாலாஜி தாக்கம்
இதை சரி செய்வதற்காக திமுக சார்பில் கரூரில் இருந்து செந்தில் பாலாஜியை கோவைக்கு ஸ்பெஷல் அஸைன்மென்ட் கொடுத்து ஸ்டாலின் அனுப்பியுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி திமுக வேட்பாளராக களமிறங்கினார். கோவையில் உள்ள மற்ற தொகுதிகளிலும் செந்தில் பாலாஜியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டுள்ளது.
பொதுவாக தேர்தல் பணிகளில் கோவையில் திமுகவை விட, அதிமுக தான் முன்னிலை வகிக்கும். ஆனால் இந்தமுறை அதிமுக சார்பில் சற்று சுணக்கம் காட்ட, செந்தில் பாலாஜி இறங்கியடித்துள்ளார். காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் கூட திமுக அதிக கவனம் செலுத்தி அதிமுகவுக்கு கடுமையான போட்டியை கொடுத்துள்ளனர்.
வாக்குறுதிகள்
கோவையை பொறுத்தவரை தொழில்துறை மிகவும் முக்கியமானது. பெரு நிறுவனங்கள் தொடங்கி ஏராளமான குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. தொழில்துறையின் பிரச்சனைகளை கேட்டு அவர்களுக்கான வாக்குறுதிகளை அளிக்க அதிமுக தவறிவிட்டது. பெரும்பாலான தொழில் அமைப்புகள் சந்திப்பில் வேலுமணி கலந்து கொள்ளவே இல்லை.
தன்னுடைய அண்ணன் அன்பரசன், மகன் விகாஷ் ஆகியோரை தான் வேலுமணி அதிமுக சார்பாக அனுப்பியிருந்தார். மறுபக்கம் செந்தில் பாலாஜி அனைத்து தொழில் அமைப்பினர், சங்கங்களை நேரடியாக சந்தித்து பேசியுள்ளார். ஒவ்வொரு அமைப்பின் கருத்துகளையும் கேட்டு அவர்களுக்கு என்று வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.
வேலுமணி மிஸ்ஸிங்
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளரும் நகரங்களில் கோவை முக்கியமானது. அதனால் கோவையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியமானதாக உள்ளது. கோவையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக அதிமுக, பாஜக செயல் திட்டங்கள் எதையும் சொல்லவில்லை. செந்தில் பாலாஜி ரூ.1 லட்சம் கோடியில் கோவைக்கு 26 வகையான செயல் திட்டங்களை செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
இது களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் பட்சத்தில், அந்தக் கட்சி சார்பில் மக்கள் பிரதிநிதிகள் வேண்டும் என்று தொழில்துறையினர் யோசித்துள்ளனர். வேலுமணி சார்பில் தொழில்துறையில் கூடுதல் கவனம் செலுத்தாதது அந்தக் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமாக பல மத்திய அமைச்சர்கள், பல மாநில முதலமைச்சர்களை அதிமுக பாஜக கூட்டணி பிரச்சாரத்திற்காக கோவை அழைத்து வந்தனர். அப்படியும் அவர்கள் கோவை தொழில்துறை பிரச்சனைகள் குறித்து பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications