SP Velumani: கோவை பற்றிய தயாநிதி மாறன் பேச்சு.. வாள் வீசும் வேலுமணி.. வரிந்து கட்டும் வானதி
கோவை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். கோவை மக்கள் குறித்து தயாநிதி மாறன் சொல்லிய கருத்து சர்ச்சையாகியுள்ளது. இதற்கு அதிமுக பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அவர் கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வேலுமணி, வானதி உள்ளிட்டோர் கூறியுள்ளார் (SP Velumani).
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நம்பி வந்த யாவருக்கும் கொடுத்தது கோவை என்பதே உண்மை வரலாறு! "கோவை மக்கள் கெடுத்தார்கள்" என்று சொல்ல தயாநிதி மாறனுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்?.

தீயசக்தி திமுக
உழைக்கும் மக்களான கோவை மக்களை, அதிகார மமதையில் இழிவாகப் பேசிய அவருக்கு எனது வன்மையானக் கண்டனம்! கோவை மக்களை இழிவுபடுத்துவதை ரசித்துக்கொண்டு சிரிக்கிறார் செந்தில் பாலாஜி. கோவை மாவட்ட மக்கள் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறை இதுதான். தனது பேச்சுக்கு தயாநிதிமாறன், கோவை மக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
திமுக-வின் கோவை வெறுப்பு என்பது புதிது அல்ல. கோவைக்கு திமுக எதையும் கொடுத்ததாக வரலாறு இல்லை. வருவதாக இருந்ததை எல்லாம் கெடுத்ததாக மட்டுமே வரலாறு உள்ளது.இந்த தீய எண்ணம் கொண்ட தீயசக்தி திமுக-விற்கு மீண்டும் ஒருமுறை தக்க தண்டனையைக் கொடுக்க கோவை மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
இதேபோல பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக கட்சி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கோவை மக்களைக் குறித்து மலினமாகப் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. பாசத்திற்கும் பண்புக்கும் பேர் பெற்று, பொருளாதார வளர்ச்சியில் உச்சங்கொண்டு, தேடி வருவோரையெல்லாம் வாழ வைக்கும் ஊர் கோவை.
தயாநிதி, செந்தில் பாலாஜி
தமிழகத்தின் தலைசிறந்த தொழில் நகரத்தைக் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், வாய்க்கு வந்தபடி மலினமாகப் பேசி சிரிப்பதை என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது. கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் என்பதைத் தாண்டி, கோவை மண்ணின் மகளாகச் சொல்கிறேன்! கோவை மக்களை இழிவாகப் பேசிய தயாநிதி மாறனும், அந்த கொச்சைப் பேச்சை மேடையில் இருந்தபடியே சிரித்து வெகுவாக ரசித்த செந்தில் பாலாஜி உடனடியாக கோவை மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
பரிசு நிச்சயம்
ஆதிகாலந்தொட்டே மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்டு, கோவை மீது வெறுப்பை உமிழ்ந்து வரும் திமுக தலைமைக்கு வரும் தேர்தலில் மிகப்பெரும் தோல்வியைப் பரிசளிப்பர் கோவை மக்கள். அப்போது தெரியும் கோவை மக்களின் அருமை" என்று கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications