எடப்பாடி VS ஓபிஎஸ்.. யார் பக்கம் நியாயம்.. சபாநாயகருக்கு அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கை
கோவை: அதிமுக விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை அடிப்படையில் நடுநிலையுடன் முடிவு எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கோவையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும் , மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்தார்.
அவர் கூறுகையில், அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் பணிகள் 95 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. இது மக்களின் 60 ஆண்டு கால கனவு. ரூ.1500 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட திட்டம் ஏன் இன்னும் முடிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

12 சட்ட மசோதாக்கள்
தொடர்ந்து சட்டமன்றக் கூட்டத்தொடரில் 12 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்றக் கூட்டத்தொடர் 3 முதல் 4 வாரங்கள் வரை இருக்க வேண்டும். பாமகவின் நோக்கம் ஒரு ஆண்டுக்கு 100 நாட்களாவது சட்டமன்றம் நடக்க வேண்டும் என்பதுதான். ஆனால் கடந்த 30 நாட்களும், அதற்கு முன் 28 நாட்கள் தான் நடைபெற்றது. விவாதமில்லாமல் ஒரே நாளில் 12 மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதித்து சட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு உடனடியாக ஆளுநர் கையெழுத்திட்டு சட்டமாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

போதைப்பொருட்கள்
அதேபோல் தமிழ்நாட்டில் போதை பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் அது போதுமானதாக இல்லை. போதை தடுப்பு பிரிவுக்கு சுமார் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் போலீசார் தேவைப்படுவர். ஆனால் தற்போது 500 போலீசார் மட்டுமே இதில் செயல்பட்டு வருகின்றனர். இதனை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆம்னி பேருந்து கட்டணம்
தொடர்ந்து, பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் இருந்து சென்னைக்கு வர எனக்கு விமான டிக்கெட் ரூ.3,300. ஆனால் ஆம்னி பேருந்து கட்டணம் ரூ.3,700 ஆக உள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டுமல்லாது சாதாரண காலங்களிலும் பேருந்து கட்டணம் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தொடர்ந்து, பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் இருந்து சென்னைக்கு வர எனக்கு விமான டிக்கெட் ரூ.3,300. ஆனால் ஆம்னி பேருந்து கட்டணம் ரூ.3,700 ஆக உள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டுமல்லாது சாதாரண காலங்களிலும் பேருந்து கட்டணம் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

சபாநாயகரின் முடிவு
தொடர்ந்து அதிமுக விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது அதிமுகவின் உட்கட்சி பிரச்சினை. சபாநாயகர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி தரப்பில் 62 எம்எல்ஏ-க்கள் ஆதரவாக உள்ளனர். மறுபக்கம் ஓபிஎஸ் தரப்பில் 4 எம்எல்ஏ-க்கள் ஆதரவாக உள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இதனால் சபாநாயகர் எண்ணிக்கைக்கு ஏற்ப நடுநிலையுடன் முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை
தொடர்ந்து அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை பற்றிய கேள்விக்கு, அருணா ஜெகதீசனின் விசாரணை அறிக்கை வைத்து முழுமையான சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும். காவல்துறையினர் இதனை ஒரு பாடமாக வைத்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
-
ஸ்டாலின் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார்.. உண்மை அவருக்கு தெரியாமாலேயே போயிருச்சு! அன்புமணி அட்டாக்! -
தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி வழக்கு.. குற்றவாளிகள் மீது பாய்ந்த ஆக்ஷன்! பரபரப்பான கோவை! -
கோவை சிறுமி பலாத்காரம்.. சிரித்து கொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த விஜய்? உண்மை என்ன? -
முன்னுக்குப் பின் முரண்.. ஏன் இவ்வளவு தடுமாற்றம்.. கோவை சிறுமியின் தாயிடம் அடுக்கடுக்கான கேள்வி -
கடுங்குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை.. விஜய் அதிரடி உத்தரவு! என் கவுண்டருக்கு தரப்பட்ட கிரீன் சிக்னல்? -
குழந்தை காணாமல் போனது கூட தெரியாமல் போதையில் கிடந்தேனா? வைரல் வீடியோவுக்கு கோவை சிறுமி தாய் மறுப்பு -
சூலூர் கொடூரத்தை திசைதிருப்ப.. உதயநிதியை வைத்து ஏஐ போலி படம்.. தீவிரமாக பரவும் வதந்தி.. தவெக மூவ் -
சூலூர் கொடூரம்.. 'ஹத்ராஸ்' ஆக மாறிய கோவை? உத்தர பிரதேச பாணியில் அவசரத் தகனம் செய்த காவல் துறை! -
கேடிஎம் பைக்கில் வந்த கும்பல்..காதலிக்க மறுத்த பெண் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு..கோவை ஷாக்! -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம்












Click it and Unblock the Notifications