கோவை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு.. சொத்து வரி செலுத்த இன்றும், நாளையும் சூப்பர் சான்ஸ்
கோவை: கோவை மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்கள் எளிமையாக வீட்டின் அருகிலேயே சொத்து வரி உள்ளிட்ட முக்கிய வரிகளை செலுத்தும் வகையில் சிறப்பு முகாம் இன்று, நாளை (மார்ச் 8, 9) பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது. எந்தெந்த பகுதிகளில் எல்லாம் இந்த முகாம் நடைபெறவுள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கோவை மாநகராட்சிக்கு வருவாய் வழங்குவதில் முக்கியப் பங்கு வகிப்பது சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் உள்ளிட்ட வரிகள்தான். இந்த வரிகள் மூலமாகத்தான் கோவை மாநகராட்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், சொத்து வரி ஆறு மாதத்துக்கு ஒருமுறையும், குடிநீர் கட்டணம் இரு மாதத்துக்கு ஒருமுறையும் வசூலிக்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக சிறப்பு வரிவசூல் முகாம் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் (அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) வரிவசூல் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் மார்ச் 8, 9 ஆகிய தேதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும்.
சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறும் இடங்கள்:- வார்டு எண் 5க்கு வசந்தம் நகர், விநாயகர் கோவில், வார்டு எண் 6க்கு அசோக் நகர், பிள்ளையார் கோவிலிலும், வார்டு எண் 7, 8க்கு நேரு நகர் பேருந்து நிறுத்தம் அருகில் காளப்பட்டியிலும், வார்டு எண் 23க்கு விநாயகர் கோவில் பூங்கா நகரிலும், வார்டு எண் 56க்கு சுங்கம் மைதானம். ஒண்டிப்புதூரிலும் முகாம் நடைபெறுகிறது.
வார்டு எண் 57 & 58க்கு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, நெசவாளர் காலனி, (09.03.2025 ஞாயிற்றுக்கிழமை மட்டும்), வார்டு எண் 60க்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உழவர் சந்தை அருகில். (08.03-2025 சனிக்கிழமை மட்டும்), வார்டு எண் 26க்கு (Mobile Camp) சரவணா நகர், இடையர்பாளையம் (09.03.2025 ஞாயிற்றுக்கிழமை மட்டும்), வார்டு எண் 33க்கு டேங்க் யூனியன் ரோடு கிழக்கு, கவுண்டம் பாளையம், (09.03.2025 ஞாயிற்றுக்கிழமை மட்டும்) முகாம் நடைபெறுகிறது.
வார்டு எண் 40க்கு Mobile Camp வீரகேரளத்திலும், வார்டு எண் 75க்கு மாரியம்மன் கோவில் மைதானம், சீரநாயக்கன்பாளையத்திலும், வார்டு எண் 39க்கு
பெருமாள் கோவில், சுண்டப்பாளையத்திலும் (08.03-2025 சனிக்கிழமை மட்டும்), வார்டு எண் 15க்கு அங்கன்வாடி மையம், சுப்பிரமணியம் பாளையம், வார்டு எண் 19க்கு அம்மா உணவகம், மணியகாரம்பாளையம், வார்டு எண் 25க்கு அரசு உயர் நிலை பள்ளி முகாம் நடைபெறுகிறது.
வார்டு எண் 25க்கு காந்திமாநகர் (Govt.High.school), வார்டு எண் 28க்கு சுகாதார ஆய்வாளர் அலுவலகம் (S1 Ward office), வார்சு எண் 11க்கு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, ஜனதா நகர், வார்டு எண் 87க்கு சுகாதார ஆய்வாளர் அலுவலகம் (SI Ward office), குனியமுத்தூரிலும், வார்டு எண் 88க்கு சோழன் நகர், குனியமுத்தூர். (08.03-2025 சனிக்கிழமை மட்டும் ), வார்டு எண் 89க்கு சுகாதார ஆய்வாளர் அலுவலகம் (SI Ward office), சுண்டக்காமுத்தூரிலும் முகாம் நடைபெறுகிறது.
வார்டு எண் 94க்கு மாரியம்மன் கோவில்,மாரியம்மன் கோவில் வீதி. மாச்சம்பாளையத்திலும், வார்டு எண் 32க்கு சிறுவர் பூங்கா, நாராயணசாமி வீதி. சங்கலூரிலும், வார்டு எண் 63க்கு பெருமாள் கோவில் வீதி, நியூ கலெக்ஷன் சென்டரிலும், வார்டு எண் 80க்கு ஒக்கிலியர் காலனி ஸ்கூல், கெம்பட்டி காலனியிலும் முகாம் நடைபெறுகிறது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வரிவசூல் மையங்கள் மற்றும் மேற்கண்ட சிறப்பு வரிவசூல் முகாம்களும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8, 9) ஆகிய இரண்டு நாட்களிலும் வழக்கம்போல காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். எனவே, பொதுமக்கள் இவ்வசதியைப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications