50 சென்ட் புறம்போக்கு நிலம் ரூ.2 கோடிக்கா? வளைத்து போட்ட கோவை புள்ளி.. இடித்து தூக்கிய தமிழக அரசு
கோவை: 50 சென்ட் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.. புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தது தொடர்பாக பலமுறை தகவல் அளித்தும்கூட, சம்பந்தப்பட்டவர்கள் இடத்தை காலி செய்ய மறுத்துள்ளார்கள். அதற்கு பிறகுதான் வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள்.
அரசுக்கு சொந்தமான நிலத்தை புறம்போக்கு நிலம் என்பார்கள்.. பொதுப்பயன்பாட்டிற்கு பயன்படும் தரிசு நிலங்கள், ஆறு, ஓடை, வாய்க்கால், சாலை, இடுகாடு போன்றவைகள் இதில் அடங்கும்.

அதேபோல, அரசு புறம்போக்கு நிலத்தில் 5 வருடங்களாக குடியிருந்து வருவோருக்கு அவர்களுடைய ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டு மனை பட்டாவாக வழங்கப்படுகின்றன.. இவை பெரும்பாலும் பெருநகர பகுதிகளில் நடப்பதில்லை.
எனினும், 5 வருடங்களுக்கு மேல் புறம்போக்கு நிலத்தை வைத்திருந்தால், அந்த நிலம் அரசுக்கு தேவையில்லாததாக இருந்தால், அந்த நிலத்தை உரிமை கொள்ளலாம். இவர்கள் புறம்போக்கு நிலத்திற்கான பட்டா பெறுவதற்கு தகுதியானவர் என கருதப்படுவார்கள்.
புறம்போக்கு நிலம்: புறம்போக்கு நிலத்தில், ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலம், ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலம் என்று 2 வகைகள் உள்ளன. ஆட்சேபனையற்ற புறம்போக்கு( Un objectionable Poramboke) என்றால், ஊரிலுள்ள கிராம நத்தம் நஞ்சை, தரிசு, புஞ்சை போன்றவற்றை குறிப்பதாகும். அரசு பயன்பாட்டிற்கு தேவையில்லையென்றால், இவைகளுக்கு பட்டாக்கள் உண்டு. எனினும், அதை அரசுதான் முடிவு செய்யும்.
ஆட்சேபனையுள்ள புறம்போக்கு (Objectionable Promboke) என்றால், குளம், குட்டை, வாய்க்கால், ஏரி, கண்மாய் போன்ற நீர்வழி நிலங்களை குறிப்பதாகும்.. மயானம், சாலை , காடுகள், வாய்க்கால் , தோப்பு , களம், பவுண்டு போன்ற ஆட்சேபனை உள்ள நிலங்களை வாங்கவோ அல்லது பட்டா கோரவோ இயலாது.
ஆக்கிரமிப்பு: அதேபோல, அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்தாலோ அல்லது, புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு தொடர்பாக பலமுறை தகவல் அளித்தும் சம்பந்தப்பட்டவர்கள் காலி செய்ய மறுத்தாலோ, அவர்கள் மீதும் வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இன்றுகூட கோவையில், ஆக்கிரமித்து வைத்திருந்த 2 கோடி மதிப்புள்ள இடத்தை மீட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் தாலுகா சுல்தான் பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அக்கநாயக்கன்பாளையம் கிராமத்தில் தனியார் ஒருவர் 50 சென்ட் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளார். அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு தொடர்பாக பலமுறை தகவல் அளித்தும்கூட, ஆக்கிரமிப்பு செய்திருந்த சிவசாமி என்பவர் இடத்தை காலி செய்ய மறுத்து வந்தாராம்.
ரூ.2 கோடி மதிப்பு: இந்நிலையில் சூலூர் வட்டாட்சியர் தனசேகரன் உத்தரவின் பேரில் , அந்த நிலத்தை வருவாய்த் துறையினர் தற்போது மீட்டுள்ளனர்.. சுல்தான்பேட்டை போலீசார் பாதுகாப்பின் பேரில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அங்கிருந்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு அரசு நிலத்தை நிலத்தை கையகப்படுத்தினார்கள். தற்போது கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications