கோவை ஓட்டலில் அறை எடுத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து.. கல்லூரி மாணவிக்கு நடந்த பயங்கரம்
கோவை: கோவை ஓட்டலில் அறை எடுத்து தங்கி, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அதை வீடியோ எடுத்து இளைஞர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை பீளமேட்டில் கணபதிமாநகரைச் சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி லட்சுமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). லட்சுமி கோவையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வீட்டில் இருக்கும் போது தனது ஸ்மார்ட்போனில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வந்துள்ளார்
அப்படி செல்போனில் மூழ்கி இருந்த மாணவி லட்சுமிக்கு கடந்த ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராம் மூலமாக போத்தனூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வினோத்குமார் (வயது 25) என்பவர் பழக்கம் ஆனார். 2 பேரும் அடிக்கடி செல்போன் மூலமாக பேசி வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே முதலில் நட்பு ஏற்பட்டிருக்கிறது. பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். இருவரும் பல இடங்களில் சுற்றியுள்ளனர்.

செல்போனில் வீடியோ
வினோத்குமார் கடந்த மார்ச் மாதம் மாணவியை கோவையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அப்போது மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். அதனை குடித்த சிறிது நேரத்தில் மாணவி லட்சுமி மயக்கம் ஆனார். பின்னர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வினோத்குமார் அதனை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துக்கொண்டார்.

கட்டாய திருமணம்
மயக்கம் தெளிந்த மாணவி என்ன நடந்தது என்பது தெரியாமல் தன்னுடைய வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த சம்பவம் நடந்த சிறிது நாட்களில் வினோத்குமார் மாணவி லட்சுமியை நேரில் சந்தித்து , தான் எடுத்து வைத்து இருந்த வீடியோவை காண்பித்து கல்யாணம் செய்து கொள்ளுமாறு மிரட்டி உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி முடியாது என்று மறுத்துள்ளார். ஆனால் வீடியோவை லீக் செய்துவிடுவேன் என மிரட்டி கட்டாயப்படுத்தி பெற்றோர்களின் அனுமதி பெறாமல் லட்சுமியை திருமணம் செய்தார். அதன்பின்னர் 2 பேரும் அவரவர் வீட்டிற்கு சென்று தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.இதனிடையே பெற்றோருக்கு தெரியாமல் அவர்கள் திருமணத்தை மறைத்து வந்ததாக கூறப்படுகிறது,

கோபத்தில் காதலன்
தன்னுடைய காதலன் வினோத்குமார் தன்னை மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து மிரட்டி திருமணம் செய்ததால் அவருடன் பேசுவதையும், பழகுவதையும் மாணவி தவிர்த்துள்ளார். மெல்ல மெல்ல விலகி செல்வதை உணர்ந்த வினோத்குமார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்து மாணவி லட்சுமியை பின்தொடர்ந்து வந்து தன்னுடன் வாழ வருமாறு வற்புத்தியுள்ளார். நீ என்னுடன் சேர்ந்து வாழாவிட்டால் என் செல்போனில் உள்ள ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என கூறி மிரட்டி வந்துள்ளார். ஆனால் மாணவி லட்சுமி சேர்ந்து வாழ மறுத்துவிட்டார்.

தப்பிய காதலன்
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவியின் வீட்டுக்கு சென்ற வினோத்குமார் தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார். அவர் மறுக்கவே ஆத்திரம் அடைந்த வினோத்குமார் மாணவியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் கூடவே அங்கிருந்து வினோத்குமார் தப்பி ஓடிவிட்டார். தாக்குதலில் காயம் அடைந்த மாணவி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Recommended Video

வழக்கு பதிவு
இது குறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் மாணவி லட்சுமி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் தாக்குதல்,. கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வினோத்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து மாணவியை இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்து கட்டாய திருமணம் செய்த விவகாரம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications